சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் உலக வானொலி நாள் கொண்டாட்டம்

விக்கிசெய்தி இல் இருந்து
Jump to navigation Jump to search

வியாழன், பெப்ரவரி 14, 2013

பெரியார் பல்கலைக்கழக, இதழியல் மற்றும் மக்கள் தொடர்பியல் துறையின் சார்பில் உலக வானொலி நாள் சேலத்தில் நேற்று புதன்கிழமை கொண்டாடப்பெற்றது. இந்த நிகழ்விற்கு, பெரியார் பல்கலைக்கழக, இதழியல் மற்றும் மக்கள் தொடர்பியல் துறையின் துறைத்தலைவர் பேராசிரியர் வை. நடராஜன் தலைமை ஏற்றார்.


கிருட்டிணகிரி கலை, அறிவியல் கல்லூரியின் முதல்வர் பேராசிரியர் சுப்பையா மற்றும் பத்மவாணி கலை, அறிவியல் கல்லூரியின் முதல்வர் பேராசிரியர் சுப்புராஜ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்; இதழியல் மற்றும் மக்கள் தொடர்பியல் துறையைச்சார்ந்த உதவிப்பேராசிரியர்கள் முனைவர் இரா. சுப்பிரமணி, மா. தமிழ்ப்பரிதி, முனைவர் பட்ட ஆய்வாளர் முரளி ஆகியோர் தங்கள் வானொலி அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர்; மாணவர்கள் மாதிரி வானொலி நிகழ்ச்சிகளை வழங்கினர். இந்த நிகழ்வை பெரியார் பல்கலைக்கழக, இதழியல் மற்றும் மக்கள் தொடர்பியல் துறையின் இணைப்பேராசிரியர் மற்றும் பெரியார் பல்கலைக்கழக, தேசிய நாட்டு நலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர் சு. நந்தகுமார் ஏற்பாடு செய்தார்.


ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 13 ஆம் நாளை யுனெஸ்கோவின் பரிந்துரையின்படி, வானொலி குறித்த விழிப்புணர்வை உண்டாக்கும் வகையிலும் வானொலியின் பயனை உலகறியச்செய்யும் வகையிலும் உலக வானொலி நாள் கொண்டாடப்பட்டு வருகின்றது.