சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் தமிழ்க்கணினி மற்றும் தமிழ் விக்கிப்பீடியா பயிலரங்கம்
- 5 ஏப்பிரல் 2016: பனாமா பேப்பர் விவகாரம் உலகின் அதிகாரமிக்கவர்களின் வரி ஏய்ப்பை காட்டியுள்ளது
- 23 திசம்பர் 2015: அண்டத்தின் அழகி பட்டம் தவறுதலாக பிலிப்பைன்சு அழகிக்கு பதில் கொலம்பியா அழகிக்கு தரப்பட்டது
- 9 ஏப்பிரல் 2015: கோவையில் பெப்ரவரி 2010 இல் ஒன்பதாவது உலகத் தமிழ் மாநாடு
- 1 ஏப்பிரல் 2015: பெரியார் பல்கலைக்கழகத்தில் நூறு மாணவர்கள் பங்கேற்ற விக்கியூடக மின் ஆவணவாக்கப் பயிலரங்கம்
- 25 மார்ச்சு 2015: சேலம் நடுவண் சிறையில் தமிழ்க்கணிமை, திறவூற்று மென்பொருள் பயிலரங்கம்
செவ்வாய், அக்டோபர் 15, 2013
சேலம் பகுதியைச்சார்ந்த பொது மக்களுக்கும், பல்கலைக்கழக, கல்லூரி மாணவர்களுக்கும் தமிழ்க்கணினி மற்றும் தமிழ் விக்கிப்பீடியா தொகுப்புப்பணிகளில் ஈடுபாட்டை ஏற்படுத்தவும் தமிழ் விக்கிப்பீடியாவின் திட்டங்களில் அனைவரும் பங்கேற்கும் வகையில் எளிய செய்முறை விளக்கம் அளிக்க வேண்டும் என்பதையும் நோக்கங்களாகக் கொண்டு பெரியார் பல்கலைக்கழக வேலைவாய்ப்பு மையம், விக்கிப்பீடியா, தமிழக அரசின் வேலைவாய்ப்பு , பயிற்சித்துறையுடன் இணைந்து சேலம் சுழற்சங்கம் தமிழ்க்கணினி மற்றும் தமிழ் விக்கிப்பீடியா பயிலரங்கத்தினை பெரியார் பல்கலைக்கழகத்திலுள்ள பெரியார் கலையரங்கில் 26.10.2013, 09.11.2013 ஆகிய நாட்களில் காலை 9.30 மணி முதல் மாலை 5.00 மணி வரை நிகழ்த்த உள்ளது.
பெரியார் பல்கலைக்கழக வேலைவாய்ப்பு மையத்தின் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் முனைவர். இரா. வெங்கடாசலபதி வரவேற்புரை ஆற்றவும், பெரியார் பல்கலைக்கழக பதிவாளர் பேராசிரியர் முனைவர். கே. அங்கமுத்து தமிழ்க்கணினி மற்றும் தமிழ் விக்கிப்பீடியா பயிலரங்கத்தை தொடங்கி வைத்து தலைமையுரை ஆற்றவும், சேலம் சுழற்சங்கத்தின் தலைவர் ம. கோ. கொ. விஜய குமார், பெரியார் பல்கலைக்கழக கணினி அறிவியல் துறை துறைத்தலைவர் பேராசிரியர் முனைவர். கே. தங்கவேல், பெங்களூரு இணைய மற்றும் சமூக மையத்தின் திட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர். விஷ்ணுவர்தன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கவும் பெரியார் பல்கலைக்கழக இதழியல் மற்றும் மக்கள் தொடர்பியல் துறை பேராசிரியர். மா. தமிழ்ப்பரிதி சிறப்புரை ஆற்றவும், சேலம் சுழற்சங்க செயலர் த. சௌந்தராஜன் நன்றியுரை ஆற்றவும் உள்ளனர்.
இந்நிகழ்வில் விக்கிமீடியா குறித்து விளக்க, கருத்தாளர்கள் தகவல் உழவன் மற்றும் பார்வதிஸ்ரீ ஆகியோர் பங்கேற்க உள்ளனர். தமிழ் விக்கிப்பீடியா அறிமுகம், தமிழ் விக்கிப்பீடியா திட்டங்கள் , தமிழ் விக்கிப்பீடியா தொகுத்தல் பணி, தமிழ்க்கணினி அறிமுகம், தமிழ்க்கணினியின் தேவை, தமிழ் இயங்கு தளங்கள், தமிழ் மென்பொருட்கள், தமிழ் எழுத்துரு, தமிழ் ஒருங்குகுறி, தமிழ் ஒருங்குகுறியின் பயன்கள், தமிழ் வலைப்பூ உருவாக்கம், திறந்தநிலை இயங்குதளங்கள் மற்றும் மென்பொருட்கள், ஒலிக்கோப்பு, ஒளிப்படங்கள், காணொளிகளின் பயன்பாடுகள் மற்றும் அவற்றை விக்கிப்பீடியா திட்டங்களில் இணைக்கும் முறைகள் குறித்த நேரிடை செயல்முறைப்பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
இந்நிகழ்வில் பங்கேற்க
[தொகு]இப்பயிலரங்கில் பங்கேற்க விரும்புபவர்கள் தங்களின் பெயரை தமிழகம் என்னும் வலைதளத்தில் பதிவு செய்து, 26.10.2013 அன்று நிகழ உள்ள பயிலரங்கிலோ அல்லது 09.11.2013 அன்று நிகழ உள்ள பயலரங்கிலோ பங்கேற்கலாம். இப்பயிலரங்கம் குறித்து மேலும் விவரம் தேவைப்படுவோர் +91-9750933101, +91-9442105151 ஆகிய இரு எண்களில் தொடர்பு கொள்ளலாம். பெயர்ப்பதிவு செய்து கொண்டவர்களுக்கு நிகழ்வில் பங்கேற்க முன்னுரிமை அளிக்கப்படும்.