சோமாலிய தீவிரவாத தாக்குதலில் 137 இக்கும் மேற்பட்டோர் பலி

விக்கிசெய்தி இல் இருந்து
Jump to navigation Jump to search

ஞாயிறு, அக்டோபர் 15, 2017


சோமாலிய தலைநகர் மொகடிசுவில் சுமையுந்தில் வைக்கப்பட்ட வெடிகுண்டு வெடித்ததில் குறைந்தது 137 பேர் இறந்தனர். இந்த சுமையுந்து சபாரி விடுதிக்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்ததாகவும் வெடி விபத்தில் விடுதி உருக்குலைந்து விட்டதாகவும் பிபிசி நிருபர் தெரிவிக்கிறார். பலியானவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.


2007 இல்அல் சபாப் குழு அரசுக்கு எதிராக கிளர்ச்சியை ஆரம்பித்ததில் இருந்து இதுவே மோசமான தாக்குதலாகும். தாக்குதல் நடத்தியவர்கள் யார் என்று தெரியவில்லை ஆனால் அல்-சபாப் ஆக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.


இரண்டாவது வெடி நகரின் மதினா வட்டாரத்தில் நடந்தில் இருவர் இறந்தனர்


மூலம்[தொகு]