உள்ளடக்கத்துக்குச் செல்

ஜப்பான் நிலநடுக்கத்தில் நூற்றுக்கணக்கானோரை காணவில்லை

Checked
விக்கிசெய்தி இலிருந்து

ஞாயிறு, ஏப்பிரல் 17, 2016

சப்பான் ர்யுக்யு தீவுகள் பக்கத்தில் நீல கோலிக்குண்டு போல் காட்சிதரும் வரைபடம்

சப்பானில் சனிக்கிழமை அதிகாலை ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 30க்கும் அதிகமானவர்கள் பலியாகியுள்ளனர். நூற்றுக்கணக்கானவர்களை காணவில்லை என அரசு கூறுகிறது. தென் தீவான கியூசுவில் நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட பாதிப்புக்கள் மற்றும் இழப்புக்கள் தொடர்பான துல்லியமான தகவல்களை உடனடியாக மக்களுக்கு வழங்கி, மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கையை விரைவாக முன்னெடுக்குமாறு பிரதமர் ஷின்சோ ஆபே உத்தரவிட்டுள்ளார்.

7.3 அளவு கொண்ட இந்த நிலநடுக்கத்தினால் வீடுகள், மேம்பாலங்கள் மற்றும் கட்டடங்கள என பல உடைந்து சுக்குநூறானதுடன், ஆங்காங்கே மண்சரிவுகளும் ஏற்பட்டுள்ளன. நிலநடுக்கம் காரணமாக ஏராளமானோர் இடுபாடுகளுக்குள் சிக்கியிருக்கலாம் என நம்பப்படுகிறது. இவ்வாறு இடுபாடுகளுக்குள் சிக்கி காணாமல் போனோரை தேடும் நடவடிக்கையில் மீட்புப் பணியாளர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். ஆனால் அங்கு பெய்துவரும் கடும் மழை மற்றும் காற்று காரணமாக மீட்புப் பணிகளுக்கு இடையூறுகள் ஏற்பட்டுள்ளன என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


மூலம்

[தொகு]