உள்ளடக்கத்துக்குச் செல்

ஜோர்ஜிய நாடாளுமன்றத் தேர்தலில் ஆளும் கட்சி தோல்வி

Checked
விக்கிசெய்தி இலிருந்து

செவ்வாய், அக்டோபர் 2, 2012

ஜோர்ஜியாவில் நேற்று நடந்த நாடாளுமன்றத் தேர்தல்களில் தனது கட்சி தோல்வியடைந்து விட்டதாக அரசுத்தலைவர் மிக்கைல் சாக்காஷ்விலி இன்று தேசியத் தொலைக்காட்சியில் தோன்றி அறிவித்தார்.


கோடீசுவரர் பிஜினா இவானிஷ்விலி தலைமையிலான ஜோர்ஜியக் கனவு என்ற முக்கிய எதிர்க்கட்சி வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றி மூலம் சோவியத் ஆட்சிக்குப் பின்னரான ஜோர்ஜியக் குடியரசில் மக்களாட்சி முறையில் அரசு மாற்றம் முதன் முறையாக இடம்பெறவுள்ளதாக அவதானிகள் கருதுகின்றனர்.


2003 ஆண்டு அரசுத்தலைவராகப் பதவிக்கு வந்த சக்காஷ்விலி அடுத்த ஆண்டு அரசுத்தலைவர் தேர்தல் இடம்பெறும் வரை தொடர்ந்து பதவியில் இருப்பார். ஆனாலும், அண்மையில் அறிவிக்கப்பட்ட அரசியல் சீர்திருத்தத்தின் படி, நாடாளுமன்றத்துக்கும், பிரதமருக்கும திக அரசுத்தலைவரை விட அதிக அதிகாரங்கள் வழங்கப்படும்.


இதுவரை அறிவிக்கப்பட்ட முடிவுகளின் படி, மொத்தமுள்ள 150 தொகுதிகளில் எதிர்க்கட்சி 77 இடங்களைக் கைப்பற்றியுள்ளது.


மேற்குலக ஆதரவாளரான சக்காஷ்விலி, புதிய அரசு மாஸ்கோ சார்புக் கொள்கைகளையே முன்னெடுக்கும் என எச்சரிக்கை விடுத்துள்ளார். 2008 ஆம் ஆண்டில் இரு நாடுகளுக்கும் இடையே சிறிய போர் மூண்டது.


மூலம்

[தொகு]