உள்ளடக்கத்துக்குச் செல்

டிசம்பர் இசை விழா 2014: மேண்டலின் ஸ்ரீநிவாஸ் நினைவு இசை நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன

Checked
விக்கிசெய்தி இலிருந்து

வியாழன், திசம்பர் 4, 2014

அண்மையில் காலமான மேண்டலின் இசைக் கலைஞர் உ. ஸ்ரீநிவாசுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், சிறப்பு இசை நிகழ்ச்சிகளை நடத்த சென்னையின் கலைமன்றங்கள் திட்டமிட்டுள்ளன.


சிறீ பார்த்தசாரதி சுவாமி சபா

எதிர்வரும் சனவரி 3, 4 தேதிகளில் நடைபெறவுள்ள இசை நிகழ்ச்சிகள், உ. ஸ்ரீநிவாசுக்கு அர்ப்பணிக்கப்படுகின்றன. நான்காம் தேதி மாலை 6.45 மணிக்கு உ. ராஜேஷ் (உ. ஸ்ரீநிவாசின் தம்பி) (மேண்டலின்), அனில் ஸ்ரீநிவாஸ்(பியானோ) இருவரும் இணைந்து வழங்கும் இசை நிகழ்ச்சி நடைபெறும்.

மியூசிக் அகாதெமி

டிசம்பர் 23 அன்று நடைபெறும் அனைத்து நிகழ்ச்சிகளும் உ. ஸ்ரீநிவாசுக்கு அர்ப்பணிக்கப்படுகின்றன. அன்று காலை 8 மணிமுதல் 8.10 மணிவரை அஞ்சலிக் கூட்டம் நடைபெறும்.


மூலம்

[தொகு]
  • பக்கம் எண்: 4, 11, இசை விழா சிறப்பு இணைப்பு, தி இந்து (ஆங்கிலம்), டிசம்பர் 1, 2014