டி-20 தரவரிசையில் இந்தியா முதல் இடம்

விக்கிசெய்தி இல் இருந்து
Jump to navigation Jump to search

வெள்ளி, ஏப்ரல் 4, 2014

இந்தியா இதுவரை சர்வதேச தரவரிசையில் முதல் இடத்தில் இருந்த இலங்கையை பின்னுக்குத்தள்ளி முதல் இடத்திற்க்கு முன்னேறியுள்ளது. இந்திய அணி குரூப் சுற்றில் இதுவரை ஒரு ஆட்டத்திலும் தோழ்வியடையாமல் தரவரிசை புள்ளிகள் 7ஐ பெற்று மொத்தமாக 130 புள்ளிகள் என்ற கணக்கில் வங்காள தேசத்தில் நடக்கும் டி-20 போட்டியில் முன்னேறி உள்ளது.

வங்கதேசத்தில் நடைபெற்று வரும் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் விளையாடி வரும் இந்திய அணி, குரூப் சுற்றில் ஓர் ஆட்டத்தில்கூட தோற்காமல் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. இதன்மூலம் 7 ரேட்டிங் புள்ளிகளைப் பெற்ற இந்தியா ஒட்டுமொத்தமாக 130 ரேட்டிங் புள்ளிகளை எட்டியுள்ளது.

இலங்கை அணியும் 130 ரேட்டிங் புள்ளிகளை வைத்திருந்தாலும் பதின்முறைப் பின்னக்கணக்கின் மூலம் இந்தியா முன்னேறுயுள்ளது. இந்த ஆட்டத்தில் மேற்கிந்திய தீவுகள் 5வது இடம் பெற்றுள்ளது.

Bookmark-new.svg