உள்ளடக்கத்துக்குச் செல்

தங்க மீன்கள் திரைப்படம் மூன்று தேசிய விருதுகளைப் பெற்றது

விக்கிசெய்தி இலிருந்து

வியாழன், ஏப்பிரல் 17, 2014

இயக்குனர் ராம் இயக்கிய தங்க மீன்கள் என்ற தமிழ் திரைப்படத்திற்கு மூன்று தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு திரைப்படத் துறைக்கான 61ஆவது தேசிய விருதினை அறிவித்துள்ளது. இதில் குழந்தை நட்சத்திரம் சாதனா நடித்த தங்கமீன்கள் என்ற குடும்பப் படத்திற்கு மூன்று விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. சிறந்த தமிழ் படத்திற்கான விருதும், குழந்தை நட்சத்திரத்திற்கான விருது சாதனாவிற்கும், 'ஆனந்த யாழை மீட்டுகிறாள்' என்ற பாடலை எழுதியதற்காக பாடலாசிரியர் நா. முத்துக்குமாருக்கு சிறந்த பாடலாசிரியர் விருதும் ஆக மூன்று விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

மூலம்[தொகு]