உள்ளடக்கத்துக்குச் செல்

தணிக்கைச் சட்டத்திற்கு எதிர்ப்பு, உருசிய விக்கிப்பீடியா 24 மணிநேரத்திற்கு மூடப்பட்டது

விக்கிசெய்தி இலிருந்து

செவ்வாய், சூலை 10, 2012

சில இணையத்தளங்களைத் தடை செய்ய அரசுக்கு அதிகாரம் அளிக்கும் சட்டமூலத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் முகமாக உருசிய விக்கிப்பீடியா 24 மணி நேரத்திற்கு மூடப்பட்டுள்ளது.


உருசிய விக்கிப்பீடியா சின்னம்

சிறுவர் துஷ்பிரயோகம், இளவயதினரை தற்கொலைக்குத் தூண்டல், மற்றும் போதைப்பொருள் தொடர்பான விபரங்களை வெளியிடுதல் போன்ற இணையதளங்களைத் தடை செய்ய தமக்கு அதிக அதிகாரம் தேவையென உருசிய அரசு கேட்டுள்ளது.


ஆனால் இந்தச் சட்டமூலம் சீனாவில் கொண்டுவரப்பட்ட தணிக்கைச் சட்டங்களுக்கு இணையானது என விக்கிப்பீடியா கருதுகிறது. இச்சட்டமூலம் ஒரு பரந்த விரிவடையக்கூடிய தன்மை உள்ளதென இணையப் பயனர்களும், மனித உரிமை ஆர்வலர்களும் விவாதிக்கின்றனர். இணையத்தளங்களைத் தெரிவு செய்யும் உரிமை அரசுக்கு இதன் மூலம் வழங்கப்படுகிறது என அவர்கள் தெரிவிக்கின்றனர்.


அமெரிக்கக் காங்கிரசின் வலைத்தடக் கொள்ளைத் தடைச் சட்டமூலத்துக்கு எதிராக கடந்த சனவரியில் ஆங்கில விக்கிப்பீடியா 24 மணி நேரத்திற்கு மூடப்பட்டிருந்தது.


மூலம்[தொகு]