தமிழகத்தில் மேலவை அமைக்கப்படமாட்டாது, ஜெயலலிதா அறிவிப்பு

விக்கிசெய்தி இலிருந்து

புதன், மே 25, 2011

தமிழ்நாட்டில் சட்ட மேலவை வேண்டாம் என்பது தான் அ.தி.மு.க.வின் கொள்கை எனத் தமிழக முதல்வர் ஜெயலலிதா தெரிவித்திருக்கிறார்.


அஇஅதிமுக நிறுவனர் எம்ஜிஆர் ஆட்சிக் காலத்தில் சட்டமேலவை கலைக்கப்பட்டது. 1996-2001 காலகட்ட்த்தில் சட்டமேலவையை மீண்டும் அமைக்க அன்றைய திமுக அரசு எடுத்த முயற்சிகளை அதன் பின்வந்த அஇஅதிமுக ஆட்சிக்காலத்தில் முறியடிக்கப்பட்டன.


கடந்த திமுக ஆட்சிக்காலத்தில் மேலவை மறுபடி வேண்டும் எனக்கோரி மீண்டும் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பின்னர் நாடாளுமன்றத்தில் அதற்கான சட்டமும் இயற்றப்பட்டு குடியரசுத்தலைவரின் ஒப்புதலும் பெறப்பட்டிருக்கிறது. இப்பின்னணியில் நேற்று செவ்வாய்கிழமை நடந்த ஒரு செய்தியாளர் சந்திப்பில் சட்டமேலவை குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த முதல்வர் ஜெயலலிதா, எம்.ஜி.ஆரின் முடிவே கட்சியின் கொள்கை என்றார்.


மூலம்[தொகு]