உள்ளடக்கத்துக்குச் செல்

தமிழகத்தில் 5 மெகாவாட் சூரியசக்தி மின் நிலையம் துவக்கம்

Checked
விக்கிசெய்தி இலிருந்து

செவ்வாய், திசம்பர் 28, 2010

தமிழ்நாட்டில் சிவகங்கை மாவட்டத்தில் சூரிய ஒளியின் மூலம் 5 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கும் மின் நிலையம் திசம்பர் 22, 2010-இல் துவக்கப்பட்டுள்ளது. இதனை மோசர் பேயர் என்னும் தனியார் நிறுவனம் அமைத்துள்ளது. இந்தியாவிலேயே மிகப்பெரும் சூரிய ஆற்றல் மின்நிலையம் இது என மோசர் பேயர் நிறுவனம் கூறியுள்ளது.


"அதிகாரபூர்வ மதிப்பீட்டின் படி, இந்தியா ஆண்டொன்றிற்கு 5,000 டிரில்லியன் கிலோவாட்மணி சூரியக் கதிர்வீச்சைப் பெற்று வருகிறது. இது ஒரு சதுர கிலோமீட்டருக்கு 4-7 கிலோவாட்மணி ஆகும். இந்த மதிப்பீடு இந்தியாவின் மொத்த மின்சாரப் பயன்பாட்டை (848 பில்லியன் கிலோவாட்மணி) விட அதிகமானதாகும். இந்த வகையில் இந்தியா மிகப்பெரும் ஆற்றல் வளத்தைக் கொண்டுள்ளது. இதனை நாம் சரியான பாதையில் பயன்படுத்த வேண்டும்," என மோசர் பேயர் நிறுவன தலைவர் ரத்துல் பூரி தெரிவித்தார்.


மேற்கோள்கள்

[தொகு]