தமிழக உள்ளாட்சி தேர்தலுக்கு நீதிமன்றம் தடை

விக்கிசெய்தி இலிருந்து

செவ்வாய், அக்டோபர் 4, 2016

அக்டோபர் 17, 19 ஆகிய தேதிகளில் நடக்கவிருந்த தமிழக உள்ளாட்சி தேர்தலுக்கு உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.


செப்டம்பர் 26 அன்று தமிழக தேர்தல் ஆணையம் உள்ளாட்சி தேர்தல் நடத்த அறிவித்த அறிக்கை தமிழக உள்ளாட்சி சட்டம் விதி 24, 1995 ஐ மீறுவதாக உள்ளதாக நீதிமன்றம் அறிவித்தது. தடை விதிக்கவேண்டுமென திமுக வழக்கு தொடுத்து இருந்தது.


திமுக மலைவாழ் மக்களுக்கு போதிய தகுந்த அளவில் இட ஒதுக்கீடு செய்யப்படவில்லை என்றும் அரசியல் கட்சிகளுக்கு அவகாசம் தராமல் அவசர கதியில் தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளதாகவும் நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தது.


நீதிமன்றம் புதிதாக தேர்தல் அறிவிப்பை வெளியிட்டு டிசம்பர் 31 ,2016 இக்குள் உள்ளாட்சி தேர்தலை நடத்தி முடிக்குமாறு ஆணையிட்டுள்ளது. மேலும் தமிழக அரசு பிரிவு 251ஐ பயன்படுத்த ஆணையிட்டுள்ளது.


அனைத்து வேட்பாளர்களும் மனு அளிக்கும் போது அவர்கள் மேல் காவல் துறையில் உள்ள குற்றங்கள் குறித்து தனியாக தெரிவிக்கவேண்டுமென நீதிமன்றம் தெரிவித்தது. அப்படி தனி அறிக்கை தராதவர்களின் வேட்பு மனுக்களை நிராகரிக்க ஆணையிட்டுள்ளது.மூலம்[தொகு]