தமிழ்நாட்டில் பாடசாலைகள் மீண்டும் திறப்பு

விக்கிசெய்தி இலிருந்து

திங்கள், திசம்பர் 14, 2015

இந்தியாவின் தென் மாநிலமான தமிழ்நாட்டின் வட மாவட்டங்களாகிய சென்னை, திருவள்ளூர், மற்றும் காஞ்சிபுரம் பகுதிகளின் பள்ளிகள், கல்லூரிகள் சுமார் ஒரு மாதத்திற்குப் பிறகு இன்று திறக்கப்பட்டன. இப்பாடசாலைகள் தொடர் பெருமழை, மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக கடந்த ஒரு மாதகாலம் இயங்காமல் இருந்தது.


2015 நவம்பர் 10-ம் திகதி செவ்வாய்கிழமை தீபஒளி கொண்டாட்டத்திற்காக, நவம்பர் 8-ம் திகதி முதல் 11-ம் திகதி முடிய விடுமுறை வழங்க தமிழக அரசு அறிவித்திருந்தது. அதைத் தொடர்ந்து, தொடர் மழை பெருவெள்ளம் போன்ற இடர்களின் காரணங்களால், "வானிலை நடுவம்" அறிவுறுத்தலின்படி தொடர் விடுப்பு அளிக்கப்பட்டது. இடையில் நவம்பர் 19, 20, 21, 23 ஆகிய நான்கு நாட்கள் மட்டும் பாடசாலைகள் இயங்கியிருந்தன.


மூலம்[தொகு]