உள்ளடக்கத்துக்குச் செல்

தமிழ்நாட்டில் பேருந்து விபத்தில் 22 பேர் உயிரிழப்பு

Checked
விக்கிசெய்தி இலிருந்து

புதன், சூன் 8, 2011

தமிழ்நாட்டில் பேருந்து ஒன்று தடம் புரண்டு பள்லம் ஒன்றில் வீழ்ந்து தீப்பற்றியதில் 22 பேர் உயிரிழந்ததாகக் காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.


தலைநகர் சென்னையில் இருந்து நேற்று செவ்வாய்க்கிழமை திருப்பூருக்குச் சென்று கொண்டிருந்த கேபிஎன் நிறுவனத் தொடருந்து வேலூர் மாவட்டம் காவேரிப்பாக்கம் என்ற இடத்தில் முன்னே சென்று கொண்டிருந்த இரு பாரவூர்திகள் மோதிக்கொண்டதை அடுத்து அவற்றோடு மோதுவதைத் தவிர்ப்பதற்காக சாலையோரம் திரும்பியதில், கட்டுக்கடங்காமல் பள்ளத்தில் வீழ்ந்து தீப்பற்றியது.


வாகனச் சாரதி, மற்றும் பயணி ஒருவர் மட்டுமே உயிர் தப்பி வெளியே வந்தனர். ஏனைய அனைவரும் உயிருடன் உடல் கருகி மாண்டனர். இதுவரை 15 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இந்த விபத்தில் உயிரிழந்த 22 பேரில், 14 பேர் பொள்ளாச்சியைச் சேர்ந்தவர்கள். 4 பேர் உடுமலை மற்றும் 4 பேர் திருப்பூரைச் சேர்ந்தவர்களாவர்.


விபத்தில் உயிர் தப்பியவர் சென்னை முகபேரை சேர்ந்த கார்த்திக் என்ற ஆசிரியராவார். இவர் தனது மனைவியுடன் சென்ற போது விபத்து ஏற்படுகையில் பின்பக்கக் கதவு திறந்ததால் வெளியே குதித்துவிட்டதாகவும் தீ மளமளவென பரவியதால் மனைவியை காப்பாற்ற முடியவில்லை என்றும் கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.


"த‌மி‌ழ்நா‌ட்டி‌ல் அ‌திகமாக சாலை ‌விப‌த்து‌க‌ள் நட‌ப்பது‌ம் பல‌ர் உ‌யி‌ர் இழ‌ப்பது‌‌ம் ‌மிகு‌ந்த கவலையையு‌ம் அ‌ச்ச‌த்தையு‌ம் ஏ‌ற்ப‌டு‌த்‌து‌கிறது. சாலைக‌ளி‌ல் வாகன‌ங்களை‌க் க‌ண்ம‌ண் தெ‌ரியாத வேக‌த்‌தி‌ல் ஒ‌ட்டுவது‌ம் இ‌ன்னு‌ம் ப‌ல்வேறு காரண‌ங்க‌ளினாலு‌ம் கோரமான ‌விப‌த்து‌க‌ள் ஏ‌ற்படு‌கி‌ன்றன," என மதிமுக செயலாளர் வைகோ தெரிவித்தார். ‌விப‌த்‌தி‌ல் உ‌யி‌ர் ‌நீ‌‌த்தவ‌ர்க‌ளி‌ன் குடு‌ம்ப‌த்‌தினரு‌க்கு அவர் ஆ‌ழ்‌ந்த இர‌ங்கலை தெ‌ரி‌வித்தார்.


கடந்த மாதம் அசாம் மாநிலத்தில் பேருந்து ஒன்று பாலம் ஒன்று உடைந்து வீழ்ந்ததில் ஆற்றினுள் மூழ்கியதில் 25 பேர் கொல்லப்பட்டனர்.


மூலம்

[தொகு]