தமிழ் நாட்டின் 24வது ஆளுநராக கே. ரோசய்யா பதவியேற்பு

விக்கிசெய்தி இலிருந்து

வியாழன், செப்டெம்பர் 1, 2011

தமிழ்நாட்டின் 24வது ஆளுநராக கே. ரோசய்யா நேற்று மாலை பதவியேற்றுக் கொண்டார். சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எம். ஒய். இக்பால் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இதுவரை ஆளுநராக பணியாற்றி வந்த எஸ். எஸ். பர்னாலா ஓய்வு பெற்றதையடுத்து தமிழக ஆளுநராக சமீபத்தில் குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் நியமனம் செய்து அறிவித்தார்.


குண்டூர் மாவட்டத்தில் உள்ள வேமுரு என்ற இடத்தில் சூலை 7 1933 இல் பிறந்த ரோசய்யா ஆந்திராவைச் சேர்ந்தவர். ஆந்திராவில் 16 முறை வரவு செலவு தாக்கல் செய்து சாதனை படைத்தவர். பல்வேறு முதல்வர்களின் கீழ் அமைச்சராக பணியாற்றியவர். முன்னாள் முதல்வர் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி மறைவுக்குப் பின்னர் 2009ம் ஆண்டு செப்டம்பர் 3ம் தேதி முதல் 2010 நவம்பர் 24 வரை முதல்வர் பொறுப்பை வகித்தார்.


பதவிப்பிரமாண விழாவில் முதல்வர் ஜெயலலிதா, அமைச்சர்கள், உயர்நீதிமன்ற நீதிபதிகள், காவல்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பதவியேற்றுக் கொண்ட பின்னர் மலர்க்கொத்து கொடுத்து முதல்வர் ஜெயலலிதாவும், தலைமை நீதிபதி இக்பாலும் ஆளுநர் ரோசய்யாவை வாழ்த்தினர்.


மூலம்[தொகு]