தாய்லாந்து பிரதமர் யிங்லக் சினாவத்ரா பதவியில் இருந்து அகற்றப்பட்டார்

விக்கிசெய்தி இலிருந்து

வியாழன், மே 8, 2014

தாய்லாந்தின் பிரதமர் யிங்லக் சினாவத்ராவைப் பதவியில் இருந்து விலகும்படி அந்நாட்டின் அரசியலமைப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பிரதமருடன் அவரது அமைச்சரவை உறுப்பினர்களில் ஒன்பது பேரை பதவி விலக நீதிமன்றம் உத்தரவிட்டது.


2011 ஆம் ஆண்டில் நாட்டின் தேசிய பாதுகாப்புத்துறை தலைவர் இடமாற்றம் செய்ய்யப்பட்டது சட்டவிரோதமானது என அரசியலமைப்பு நீதிமன்றம் நேற்று தீர்ப்பு வழங்கியுள்ளது. யிங்லக் தன் மீதான குற்றச்சாட்டை நீதிமன்றத்தில் மறுதளித்திருந்தார். இந்த இடமாற்றத்தின் மூலம் யிங்லக்கின் உறவினர் நன்மை பெற்றிருப்பதாக நீதிமன்றம் குறிப்பிட்டிருந்தது.


இத்தீர்ப்பினை அடுத்து வர்த்தகத்துறை அமைச்சர் நிவாத்தும்ரோங் பூன்சொங்பைசான் என்பவரை இடைக்காலப் பிரதமராக நியமிக்க மீதமுள்ள அமைச்சர்கள் முடிவு செய்துள்ளனர்.


தாய்லாந்தில் கடந்த பல மாதங்களாக அரசியல் கொந்தளிப்பு நீடித்து வரும் நிலையில் பிரதமரைப் பதவி நீக்கம் செய்யும் தீர்ப்பு வெளிவந்துள்ளது. கடந்த ஆண்டு நவம்பர் முதல் அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் பிரதமரைப் பதவியில் இருந்து வெளியேறுமாறு ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகின்றனர்.


2006ஆம் ஆண்டில் அப்போதைய பிரதமர் தக்சின் சினவாத்திரா இராணுவ சதிப்புரட்சி மூலம் பதவி கவிழ்க்கப்பட்டதை அடுத்து அங்கு கொந்தளிப்பு நீடித்து வருகிறது.


மூலம்[தொகு]