தென்கிழக்கு ஈரானில் பெரும் நிலநடுக்கம், பலர் உயிரிழப்பு

விக்கிசெய்தி இல் இருந்து
Jump to navigation Jump to search

செவ்வாய், திசம்பர் 21, 2010

தென்கிழக்கு ஈரானில் பலம் வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதில் குறைந்தது ஏழு பேர் கொல்லப்பட்டனர். கேர்மன் மாகாணத்தில் பல கிராமங்கள் சேதமடைந்தன.


ஈரானில் கேர்மன் மாகாணம்

உள்ளூர் நேரப்படி இரவு 8:12 மணிக்கு (1842 ஒசநே) இடம்பெற்ற இந்த நிலநடுக்கம் 6.5 அளவுடையதாக பாம் நகரை மையப்படுத்தியிருந்ததாக கேர்மன் மாகாண ஆளுநர் தெரிவித்தார். நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர். பலர் இன்னும் அழிபாடுகளிடையே சிக்குண்டுள்ளதாகவும், மாகாணத்துக்கான தொலைத்தொடர்புகள் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் ஈரானியத் தொலைக்காட்சி அறிவித்துள்ளது.


ஈரானின் சிஸ்டன்-பலுச்சித்தான் மாகாணத்திலும் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.


பாம் நகரில் 2003 ஆம் ஆண்டில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் 26,000 பேர் இறந்தனர்.


மூலம்[தொகு]

Bookmark-new.svg