உள்ளடக்கத்துக்குச் செல்

தென்னாப்பிரிக்காவில் பேருந்து விபத்தில் 24 பேர் உயிரிழப்பு

விக்கிசெய்தி இலிருந்து

புதன், மே 5, 2010

தென்னாப்பிரிக்காவின் கேப் டவுன் நகரில் இடம்பெற்ற பேருந்து விபத்தொன்றில் 24 பேர் கொல்லப்படனர், 10 இறும் அதிகமானோர் காயமடைந்தனர்.


கடுகதிப் பாதை வழியே கேப் டவுன் நோக்கி சென்று கொண்டிருந்த பேருந்து ஒன்றே நகரில் இருந்து 150 கிமீ வட-மேற்கே உள்ள இஅடம் ஒன்றில் வைத்து தனது கட்டுப்பாட்டை இழந்ததினால் விபத்துக்குள்ளாகியதாகத் தெரிவிக்கப்படுகிறது.


உள்ளூர் நேரப்படி இன்று அதிகாலை 0600 மணிக்கு இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர். கொல்லப்பட்டவரக்ளில் 4 பேர் குழந்தைகள் ஆவர்.


தென்னாப்பிரிக்காவில் ஜூன் மாதத்தில் உலகக் கோப்பை உதைப்பந்தாட்டப் போட்டிகள் நடைபெறப்போகும் தென்னாப்பிரிக்காவில், சாலை விபத்துக்களில் ஆண்டு தோறும் ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொல்லப்படுகின்றனர்.

மூலம்[தொகு]