தென்னாப்பிரிக்காவில் முதியோர் இல்லம் ஒன்று தீப்பற்றியதில் 18 பேர் இறப்பு

விக்கிசெய்தி இலிருந்து

திங்கள், ஆகத்து 2, 2010

தென்னாப்பிரிக்காவில் முதியோர் இல்லம் ஒன்றில் தீப்பற்றியதில் 18 பேர் உயிரிழந்ததாகவும் பலர் காயமடைந்துள்ளதாகவும் மீட்புப் பணியாளர்கள் தெரிவித்தனர்.


தலைநகர் ஜொகான்னசுபேர்கில் இருந்து 50 கிமீ தென்கிழக்கே நைஜல் என்ற இடத்தில் பீட்டர் வெசெல்ஸ் முதியோர் இல்லத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு 0900 மணியளவில் தீப்பிடித்தது. தீப்பிடித்ததற்கான காரணம் இன்னும் அறியப்படவில்லை.


இல்லத்தில் இருந்த மேலும் 84 பேர் அருகில் இருந்த தேவாலயம் ஒன்றிற்கு பாதுகாப்பாக அப்புறப்படுத்தப்பட்டனர்.


17 பேர் தீயில் கருகி மாண்டனர் என்றும் ஒருவர் மாரடைப்பால் இறந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ”எட்டு அல்லது ஒன்பது பேரை நான் காப்பாற்றினேன் என நினைக்கிறேன். பலரை என்னால் பாரத்தினால் தூக்க முடியாமல் போய் விட்டது,” என ஒரு மீட்புப் பணியாளர் தெரிவித்தார்.

மூலம்[தொகு]