தேசிய பயங்கரவாத தடுப்பு மையம் - திரிபுரா முதலமைச்சர் எதிர்ப்பு

விக்கிசெய்தி இலிருந்து

வெள்ளி, சூன் 7, 2013

தேசிய பயங்கரவாதத் தடுப்பு மையம் அமைக்க நடுவண் அரசு விடுத்த அறிவித்தல் குறித்து இடது முன்னணி ஆட்சி நடைபெறும் திரிபுரா மாநிலத்தின் முதலமைச்சர் w:மாணிக் சர்க்கார் பேசுகையில், "மத்திய அரசுக்கும் மாநில அரசுகளுக்கும் இடையே ரகசியத் தகவல்களை பரிமாறிக் கொள்வதற்கான ஒரு சீரிய கட்டமைப்பு ஏற்படுத்தப்பட வேண்டும் என்பதில் திரிபுரா அரசுக்கு எந்த மாற்றுக் கருத்தும் இல்லை; ஆனால் அதே நேரத்தில், பயங்கரவாத தடுப்பு மையம் என்ற பெயரில் நடுவண் உள்துறை அமைச்சகத்தால் முன்மொழியப்படும் ஏற்பாடு பொருத்தமற்றதாக உள்ளது; எனவே எங்களது மாநில அரசு இதை எதிர்க்கிறது” என்று குறிப்பிட்டார்.


பல போராளிக் குழுக்கள் ஒருங்கிணைந்து ஐக்கிய மன்றம் என்ற பெயரில் கூட்டமைப்பு ஒன்றை உருவாக்கியுள்ளதாகவும், இதனால் நாட்டின் வடகிழக்குப் பகுதி பெரும் அச்சுறுத்தலுக்குளாகியுள்ளது என மாணிக் சர்க்கார் எச்சரித்துள்ளார்.


குஜராத் முதலமைச்சர் நரேந்திர மோடி, பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார், உள்ளிட்டோரும் தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர். தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா ஏற்கெனவே இதைக் கடுமையாக எதிர்த்துள்ளார்.


நாட்டில் அதிகரித்து வரும் தீவிரவாதத்தை ஒழிக்க தேசிய பயங்கரவாத தடுப்பு மையம் அமைக்க மத்திய அரசு முடிவு செய்தது.


மூலம்[தொகு]