தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் நாம் தமிழர் இயக்கத் தலைவர் சீமான் கைது

விக்கிசெய்தி இல் இருந்து
Jump to navigation Jump to search

சனி, சூலை 17, 2010

நடிகரும் இயக்குனரும் "நாம் தமிழர்" இயக்கத் தலைவருமான சீமான் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் இன்று கைது செய்யப்பட்டார். இதற்கான உத்தரவை மாநகர காவல்துறைக் கமிஷனர் சஞ்சய் அரோரா பிறப்பித்தார்.


இலங்கைக் கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதைக் கண்டித்து நாம் தமிழர் இயக்கம் சார்பில் சென்னையில் சென்ற வாரம் சனிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.​ இதில் அந்த இயக்கத்தின் தலைவரும்,​​ இயக்குநருமான சீமான் வன்முறையைத் தூண்டும் விதத்தில் ​பேசியதாகக் கூறி திங்கட்கிழமை கைது செய்யப்பட்டுப் பின்னர் அவர் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார்.


சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் சீமானிடம், தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்வதற்கான உத்தரவை சென்னைக் காவல்துறையினர் இன்று வழங்கினர்.


தேசிய ஒருமைப்பாட்டுக்கும், இறையாண்மைக்கும் எதிரான கருத்துக்களை தெரிவித்ததற்காகவும், பொது அமைதிக்குப் பங்கம் ஏற்படும் வகையில் நடந்து கொண்டதற்காகவும் அவர் மீது தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருப்பதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சீமானின் பேச்சு இரு நாட்டு உறவுக்கு அச்சுறுத்தலாக இருந்ததாக கூறி, அவர் மீது இந்திய தண்டனைச் சட்டம் 153&ஏ, 13 (1) (பி) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.


இதற்கு முன்பு கடந்த பிப்ரவரி 2009-ல், திருநெல்வேயில் தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டார். நீதிமன்ற உத்தரவுக்குப்பிறகு அவர் விடுவிக்கப்பட்டார்.


தே‌சிய பாதுகா‌ப்பு ச‌ட்ட‌த்த‌ி‌ல் ‌இய‌க்குன‌ர் சீமா‌ன் கைது ச‌ெ‌ய்ய‌ப்ப‌ட்டத‌ற்கு ம.‌தி.மு.க. பொது‌ச் செயல‌ர் வைகோ கடு‌ம் க‌ண்டன‌ம் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

மூலம்[தொகு]

Bookmark-new.svg