உள்ளடக்கத்துக்குச் செல்

தோல் உயிரணுக்கள் இரத்தமாக மாற்ற வழிமுறை கண்டுபிடிப்பு

Checked
விக்கிசெய்தி இலிருந்து

வியாழன், நவம்பர் 11, 2010


ஒருவரின் தோல் உயிரணுக்களில் இருந்து இரத்தம் உருவாக்கும் வழிமுறையை கனடா, மக்மாசுடர் பல்கலைக்கழகத்தைச் சார்ந்த ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.


இது வரை இரத்தத்துக்கு மாற்று இல்லை. இதனால் இந்தக் கண்டுபிடிப்பு மிக முக்கியமானதொன்றாகும். பல நோய்களால் பாதிக்கப்பட்டோருக்கு இந்த இரத்த மாற்று உடனடியாகப் பயன்படலாம். இதன் முதன்மை ஆய்வாளர் மக்மாஸ்டட் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மிக் பாட்டியா ஆவார்.


இது தொடர்பான செய்தி கடந்த ஞாயிறன்று நேச்சர் (Nature) என்ற அறிவியல் இதழில் வெளிவந்துள்ளது. இக்கண்டுபிடிப்பின் மூலம் புற்றுநோய், போன்ற கடும் நோய்களால் பாதிக்கப்பட்டோர் தமது சொந்தத் தோலில் இருந்தே தமக்குத் தேவையான இரத்தத்தைப் பெற்றுக் கொள்ள வழி வகுக்கும் என மருத்துவர் பாட்டியா தெரிவித்தார்.


மூலம்

[தொகு]