நியூசிலாந்தில் சுரங்க வெடிப்பை அடுத்து பல தொழிலாளர்களைக் காணவில்லை

விக்கிசெய்தி இலிருந்து

வெள்ளி, நவம்பர் 19, 2010

நியூசிலாந்தில் நிலக்கரிச் சுரங்கம் ஒன்றில் ஏற்பட்ட வெடி விபத்து ஒன்றை அடுத்து அங்கு பணியில் ஈடுபட்டிருந்த சுரங்கத் தொழிலாளர்க 27 பேரைக் காணவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.


பைக் ஆறு அமைந்திருக்கும் மேற்குக் கரை

நியூசிலாந்தின் தெற்குத் தீவில் பைக் ஆற்றுப் படுகையில் 58 கிமீ தூரத்தே உள்ள கிரேமவுத் என்ற இடத்திலேயே இவ்வனர்த்தம் நிகழ்ந்ததாக அந்நகரத்தின் அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இது மிகவும் பாரதூரமான நிகழ்வு என்றும், ஆனாலும் நிவாரணப் பணியாளர்கள் அவ்விடத்துக்கு விரைந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.


சுரங்கத்தினுள் அகப்பட்டிருக்கும் தொழிலாளர்களின் நிலைமை இன்னும் அறியப்படவில்லை என்றும் வெடி விபத்துக்கான காரணம் தெரிவ்யவில்லை எனவும் அந்நாட்டின் ஆற்றல் துறை அமைச்சர் செய்தியாளர்களிடம் கூறினார்.


இவ்விபத்து உள்ளூர் நேரப்படி இன்று மாலை 1630 மணிக்கு இடம்பெற்றுள்ளது.


இப்பகுதியில் 1967 ஆம் ஆண்டில் இடம்பெற்ற ஒரு சுரங்க விபத்தில் 19 பேர் உயிரிழந்தனர்.


மூலம்[தொகு]