நியுசிலாந்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: சுனாமி அலை தாக்கியது
- 17 பெப்ரவரி 2025: நியுசிலாந்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: சுனாமி அலை தாக்கியது
- 17 பெப்ரவரி 2025: இந்தியத் துடுப்பாட்ட அணித் தலைவர் டோனி, ஒருநாள் போட்டிகளில் 8,000 ஓட்டங்களைக் கடந்தார்
- 17 பெப்ரவரி 2025: நியூசிலாந்துத் தலைநகர் வெலிங்டனை இரண்டு பெரும் நிலநடுக்கங்கள் தாக்கின
- 17 பெப்ரவரி 2025: நியூசிலாந்தில் 6.5 அளவு நிலநடுக்கம், நாடாளுமன்றம் சேதம்
- 17 பெப்ரவரி 2025: ஆப்கானித்தானில் இருந்து 2013 இற்குள் தமது படையினரை மீள அழைக்க நியூசிலாந்து முடிவு
செவ்வாய், நவம்பர் 15, 2016


நியுசிலாந்தில் நள்ளிரவு நேரத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 7.8 என்று பதிவான இந்த நிலநடுக்கத்தின் தாக்கமாக முதலில் சுனாமி அலை தெற்குத் தீவின் வடகிழக்கு கடற்கரையைத் தாக்கியது.
நாட்டின் ஒட்டுமொத்த கிழக்கு கடற்கரைப்பகுதிகளை பேரலைகள் தாக்கும் என்று நியூசிலாந்தின் குடியியல் பாதுகாப்புத் துறை எச்சரிக்கை விடுத்தது. கடலுக்கு அடியில் 10 கிமீ தூரத்திலேயே நிலநடுக்கம் ஏற்பட்டதால் சுனாமி அலைகள் தாக்கியது. மேலும், நாடு முழுதுமே இதன் தாக்கம் உணரப்பட்டதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. நிலநடுக்க மையத்திற்கு அருகில் உள்ள சிறிய ஊரான செவியட்டில் கட்டிடங்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாகவும், மேலும் பின்னதிர்வுகளும் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டன.
தெற்குத் தீவான வடக்கு கேண்டர்பரி பகுதியில், 1 மீட்டர் உயரத்திற்கு முதல் சுனாமி அலைகள் தாக்கியுள்ளன. கிறைஸ்ட் சர்ச் நகருக்கு 91 கிமீ வடகிழக்கே இதன் மையம் இருந்ததாக அறியப்பட்டது. உயிரிழப்பு மற்றும் சேத விவரங்கள் உடனடியாகத் தெரியவில்லை.
எலிசபத் என்ற ஒரு பெண்மணி ரேடியோ நியூசிலாந்துக்குக் கூறும்போது, தன் வீடு பாம்பு போல் சுழன்றது, அதனால் சில சேதங்கள் ஏற்பட்டுள்ளன. மின்சாரம் துண்டிக்கப்பட்டு இருள் சூழ்ந்து காணப்பட்டது என்றார். வெலிங்டன் நகரில் சில கட்டிடங்களின் கண்ணாடிகள் சிதறி சாலையில் விழுந்துள்ளது.
பின்னதிர்வுகள் ரிக்டர் அளவு கோலில் 6.1 என்று பதிவாகியுள்ளது. நியூசிலாந்து நாடு ஆத்திரேலியா மற்றும் பசிபிக் டெக்டானிக் பிளேட்டுகள் மீது உள்ளது, இது ரிங் ஆஃப் ஃபயர் என்று அழைக்கப்படும் பகுதியில் உள்ளதால் ஆண்டுக்கு சுமார் 15,000 நிலநடுக்கங்கள் ஏற்பட்டு வருகின்றன.
தொடர்புள்ள செய்திகள்
[தொகு]- நியூசிலாந்தின் கிறைஸ்ட்சேர்ச்சை உலுக்கிய புதிய நிலநடுக்கங்கள், டிசம்பர் 23, 2012
- நியூசிலாந்து கிறைஸ்ட்சேர்ச் பகுதியில் மீண்டும் நிலநடுக்கம், சூன் 14, 2011
- நியூசிலாந்து நிலநடுக்கத்தில் பலர் உயிரிழப்பு, பெப்ரவரி 22, 2011
- 7.0 அளவு நிலநடுக்கம் நியூசிலாந்தைத் தாக்கியது, செப்டம்பர் 4, 2010
மூலம்
[தொகு]- New Zealand hit by aftershocks after severe earthquake, பிபிசி, நவம்பர் 15, 2016
- New Zealand earthquake: Live updates as cleanup hampered by storm after major tremors cause 'utter devastation', மிரர், நவம்பர் 15, 2016
- நியூஸிலாந்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: சுனாமி அலை தாக்கியது தி இந்து தமிழ், நவம்பர் 15, 2016