உள்ளடக்கத்துக்குச் செல்

நியூசிலாந்தில் விமானக் கடத்தல் குற்றச்சாட்டில் சோமாலியப் பெண்ணுக்குச் சிறைத்தண்டனை

Checked
விக்கிசெய்தி இலிருந்து

வெள்ளி, ஆகத்து 27, 2010


2008 ஆம் ஆண்டில் சிறிய ரக பயணிகள் விமானம் ஒன்றைக் கடத்த முற்பட்ட சோமாலிய அக்திப் பெண் ஒருவருக்கு நியூசிலாந்து நீதிமன்றம் ஒன்று 9 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தது.


நியூசிலாந்தின் நகரங்கள்

ஆஷா அலி அப்தில் என்ற 36 வயதுப் பெண் மூன்று கத்திகளைக் காட்டி விமானத்தை ஆத்திரேலியாவுக்குச் செலுத்துமாறு விமான ஓட்டியை வற்புறுத்தியுள்ளார். விமானத்தில் அதற்குத் தேவையான எரிபொருள் இல்லை என விமான ஓட்டி தெரிவித்தவுடன் விமானத்தை கடலினுள் செலுத்துமாறு அப்பெண் கூறியுள்ளார்.


ஆனாலும் விமான ஓட்டியின் சாதுரியத்தால் விமானம் விமானம் பாதுகாப்பாக கிறைஸ்ட்சேர்ச் விமானநிலையத்தில் தரையிறங்கியது. விமானச் சிப்பந்திகள் அப்பெண்னை மடக்கிப் பிடித்தனர்.


விமான ஓட்டி காயங்களுடன் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டிருந்தார்.


அப்தில் என்ற இப்பெண் பிளென்ஹைம் என்ற இடத்தில் ஐந்தாண்டுகளாக வசித்து வந்தார். இவர் முன்னரும் பல தடவைகள் தாக்குதல் சம்பவங்களுக்காக குற்றம் சாட்டப்பட்டிருந்தவர் என பத்திரிகைச் செய்தி தெரிவிக்கிறது. செஞ்சிலுவைச் சங்க ஊழியர் ஒருவர் மீது பெட்ரோல் ஊற்றப் போவதாகப் பயமுறுத்தியிருக்கிறார். நேற்று இவருக்குத் தண்டனை வழங்கிய நீதிபதி அவரின் மனோவியாதியையும் கவனத்தில் கொண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.


இவர் ஏன் விமானத்தை ஆஸ்திரேலியாவுக்குச் செலுத்துமாறு பணித்தார் என்பது இதுவரையில் தெரியவில்லை.


நியூசிலாந்தில் இவ்வாறு நடைபெறுவது முதல் தடவை என பிபிசி செய்தியாளர் தெரிவிக்கிறார். இச்சம்பவத்தைத் தொடர்ந்து நியூசிலாந்தின் உள்ளூர் விமானசேவைகளின் பாதுகாப்பை அதிகப்படுத்தும் தேவை நியூசிலாந்து அரசுக்கு ஏற்பட்டுள்ளது.

மூலம்

[தொகு]