உள்ளடக்கத்துக்குச் செல்

பன்னாட்டுக் காற்பந்தாட்டக் கழகங்களின் கூட்டமைப்பின் தலைவராக பிளாட்டர் மீண்டும் தேர்வு

விக்கிசெய்தி இலிருந்து

வியாழன், சூன் 2, 2011

பன்னாட்டுக் காற்பந்தாட்டக் கழகங்களின் கூட்டமைப்பின் ஃபிஃபாவின் தலைவராக செஃப் பிளாட்டர் நான்காவது தடவையாக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ஃபிஃபா அமைப்பை மீண்டும் நேரான பாதையில் கொண்டு செல்ல தான் உறுதியுடன் இருப்பதாகவும், பன்னாட்டு அளவில், கால்பந்து விளையாட்டின் பெருமையை ஊக்குவிக்கும் முயற்சிகளில் ஈடுபட உள்ளதாகவும், மேலும் பல தொடர்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் மறுபடியும் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள செப் பிளாட்டர் கூறியுள்ளார்.


இந்தத் தேர்தல் ஒத்தி வைக்கப்பட வேண்டும் என்று, இங்கிலாந்து கால்பந்து சங்கம் கொண்டுவந்தத் தீர்மானம் பெரும்பான்மையான வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடிக்கப்பட்டுள்ளது. சுவிட்சர்லாந்து நாட்டின் சூரிக் நகரில் நடைபெற்ற ஃபிஃபாவின் மாநாட்டிலேயே தோல்வியடைந்த இந்தத் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. இதன் மூலம், ஃபிஃபா மீது தொடர்ந்து ஊழல் குற்றச்சாட்டுகள் கூறப்பட்டு வரும் நிலையிலும், செஃப் பிளாட்டர் மீண்டும் நான்கு ஆண்டுகளுக்கு தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.


ஃபிஃபா ஒரு கண்ணியமற்ற சூழலில் இருக்கிறது என்றாலும், அதன் நிதி விவகாரங்கள் தொடர்பான செயற்பாடுகள் வெளிப்படையாகவே இருக்கிறது என்று அந்த மாநாட்டில் செஃப் பிளாட்டர் தெரிவித்தார்.


இதனிடையே 2022 ஆம் உலகக் கோப்பையை நடத்த கத்தார் நாடு தேர்ந்தெடுக்கப்பட்ட முடிவானது, குறிப்பிடத்தகுந்த அளவுக்கு சந்தேகம் எழுந்துள்ள நிலையில், அந்த முடிவை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்று செருமனியக் கால்பந்து சங்கம் கோரியுள்ளளது.

மூலம்

[தொகு]