உள்ளடக்கத்துக்குச் செல்

பயனர் பேச்சு:P.M.Puniyameen

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
தலைப்பைச் சேர்
விக்கிசெய்தி இலிருந்து

வாருங்கள், P.M.Puniyameen!

விக்கிசெய்திகளுக்கு உங்களை வரவேற்கிறோம். தமிழ் விக்கிசெய்திகள் பற்றிய உங்கள் பொதுவான கருத்துக்களை கலந்துரையாடல் பக்கத்தில் தெரிவியுங்கள். ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுதி பயிற்சி செய்ய விரும்பினால், தயவு செய்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள். பேச்சுப் பக்கங்களிலும் கலந்துரையாடல்களிலும் உங்கள் கையொப்பத்தை இட ~~~~ என்ற குறியீட்டைப் பயன்படுத்துங்கள். புதுச்செய்தி ஒன்றை எழுத அதன் தலைப்பை கீழே உள்ள பெட்டியில் இட்டு அதற்கு கீழே உள்ள தத்தலை அமுக்குங்கள்.


உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்கிசெய்திகள் உங்களுக்கு முதன் முதலில் எப்பொழுது எவ்வாறு அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும். நன்றி.

--Kanags \பேச்சு 09:28, 6 ஜனவரி 2011 (UTC)

வணக்கம் புன்னியாமீன், விக்கிசெய்தியில் உங்கள் செய்திப் பதிகைகள் நன்றாக உள்ளன. ஒரு சில கருத்துக்கள்: செய்தியின் மூலம் எங்கிருந்து எடுத்தீர்கள் என்பதை செய்தியின் அடியில் தாருங்கள். குறைந்தது இரண்டு மூலங்கள் கட்டாயம் தரப்படுதல் வேண்டும். மேலும் செய்திகளை உங்கள் தமிழில் விக்கி நடையில் எழுதுங்கள். நன்றி.--Kanags \பேச்சு 05:38, 9 ஜனவரி 2011 (UTC)

வேண்டுகோள்

[தொகு]

புன்னியாமீன் அவர்களுக்கு, தனியார் இணையத்தளங்களை ஆதாரம் காட்டி செய்திகள் எழுதுவதைத் தவிருங்கள். அதிகாரபூர்வமான செய்திப்பத்திரிகைகளை ஆதாரம் காட்டுவது நல்லது. நடுநிலைச் செய்திகளைத் தருவது நல்லது. ஒருவர் சொன்னார் என்பதைச் செய்தியாகத் தருவதை முடிந்த வரையில் தவிர்ப்பது நல்லது. ஒரு சங்கத்தின் தலைவர் சொல்வதை ஒட்டு மொத்தமாக அனைத்து மக்களினதும் கருத்தாகத் தலைப்பிடுவது நடுநிலையானதல்ல. இதில் கட்டாயமான கொள்கை எதுவும் இல்லை. ஆனாலும் நிலைமைக்கேற்ப எழுதுவது நல்லது. புரிந்து கொள்வீர்கள் என நம்புகிறேன்.--Kanags \பேச்சு 20:42, 18 பெப்ரவரி 2011 (UTC)

புன்னியாமீன், தங்கள் பங்களிப்புகளுக்கு நன்றி. சில குறிப்புகள்:
  • தலைப்பில் நிறுத்தற்குறி இடுவது வழக்கமல்ல.
  • பலி, பலியானார்கள் போன்ற வடமொழிச் சொற்களைத் தவிர்க்கவும், குறிப்பாகத் தலைப்புகளில் தவிருங்கள். அதற்கு மாற்றாக உயிரிழப்பு, கொல்லப்பட்டனர், இறந்தனர் போன்ற சொற்களைப் பயன்படுத்தலாம்.--Kanags \பேச்சு 05:06, 18 ஜூன் 2011 (UTC)
நன்றி Kanags இதன்பின்பு கவனத்திற் கொள்கின்றேன். நாளை (19 ஜூன் 2011) காலை 8.00 மணி முதல் 4.00 மணிவரை கருத்தரங்கொன்றில் கலந்து கொள்ள வேண்டியுள்ளதால் நாளை செய்தி தர முடியாதிருக்கலாம் - புன்னியாமீன்

Invite to WikiConference India 2011

[தொகு]

இந்திய விக்கி மாநாடு -- மும்பை -- நவம்பர் 18-20 2011


வணக்கம் P.M.Puniyameen,

முதல் இந்திய விக்கி மாநாடு மும்பையில் 2011 நவம்பர் 18 முதல் 20 வரை நடைபெறவுள்ளது.

மாநாட்டு உரலிகள்: மாநாட்டு இணையபக்கம், ஃபேசுபுக் நிகழ்ச்சி பக்கம் , உதவித் தொகை விண்ணப்பம்(கடைசி : ஆகஸ்ட் 15) மற்றும் ஆய்வுக் கட்டுரை சமர்பிக்க (கடைசி : ஆகஸ்ட் 30).

மாநாட்டுக்கான 100 நாள் பரப்புரை தொடங்கவுள்ளது.

நீங்கள் தமிழ் விக்கி சமூகத்தின் அங்கத்தினராக இருப்பதால், மாநாட்டிற்கு வருகை தந்து உங்களின் விக்கி அனுபவத்தை பகிர்ந்துகொள்ள அழைக்கிறோம். உங்களின் பங்களிப்புகளுக்கு நன்றி.

உங்களை 18-20 நவம்பர் 2011 இல், மும்பையில் ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.

"https://ta.wikinews.org/w/index.php?title=பயனர்_பேச்சு:P.M.Puniyameen&oldid=17804" இலிருந்து மீள்விக்கப்பட்டது