பயனர் பேச்சு:Selvasivagurunathan m

விக்கிசெய்தி இல் இருந்து
Jump to navigation Jump to search

வாருங்கள், Selvasivagurunathan m!

வாருங்கள் Selvasivagurunathan m, உங்களை வரவேற்கிறோம்!

விக்கிசெய்திகளுக்கு உங்களை வரவேற்கிறோம். தமிழ் விக்கிசெய்திகள் பற்றிய உங்கள் பொதுவான கருத்துக்களை கலந்துரையாடல் பக்கத்தில் தெரிவியுங்கள். ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுதி பயிற்சி செய்ய விரும்பினால், தயவு செய்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள். பேச்சுப் பக்கங்களிலும் கலந்துரையாடல்களிலும் உங்கள் கையொப்பத்தை இட ~~~~ என்ற குறியீட்டைப் பயன்படுத்துங்கள்.

விக்கிசெய்திகளுக்கு பங்களிப்பது பற்றி மேலும் அறிந்த கொள்ள, தயவு செய்து பின்வரும் பக்கத்தை ஒருமுறை பார்க்கவும்:


உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்கிசெய்திகள் உங்களுக்கு முதன் முதலில் எப்பொழுது எவ்வாறு அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும். நன்றி.


புதிய செய்தி ஒன்றை எழுத, செய்திக்கான தலைப்பைக் கீழே உள்ள பெட்டியில் இட்டு அதற்குக் கீழே உள்ள பொத்தானைச் சொடுக்குங்கள்.


--Kanags \பேச்சு 23:09, 27 ஜனவரி 2013 (UTC)

மூலம்[தொகு]

வணக்கம் செல்வசிவகுருநாதன், விஸ்வரூபம் செய்தியின் மூலத்தை குறிப்பிட முடியுமா?, ஏனெனில் விஸ்வரூபம் படம் 25 ஆம் தேதியே தமிழகம் தவிர அனைத்து இடங்களிலும் வெளியாகி விட்டதெனவும், பாதுகாப்பு காரணங்களுக்காக பெங்களூரில் இடையில் நிறுத்தப்பட்டதாகவும் அறிந்தேன் (நண்பர்கள் சனிக்கிழமையே பெங்களூருவில் பார்த்துவிட்டதாக கூறினர்). இப்போது மீண்டும் அனுமதித்துள்ளதற்கான ஆதாரம்/ மூலம் இணையத்தில் கிடைக்கவில்லை. நன்றி --சண்முகம்ப7 (பேச்சு) 12:44, 29 ஜனவரி 2013 (UTC)

இணைத்தமைக்கு நன்றி :)--சண்முகம்ப7 (பேச்சு) 12:58, 29 ஜனவரி 2013 (UTC)

நன்றி[தொகு]

உங்கள் செய்திக்கு நன்றி. சிறந்த முறையில் எழுதிருக்கிறீர்கள். தொடர்ந்து எழுதுங்கள். ஒரு செய்தியில் குறைந்தது இரண்டு மூலச் செய்திகளுக்கான இணைப்புகளைத் தாருங்கள். தொடர்ந்து எழுதுங்கள். நன்றி.--Kanags \பேச்சு 09:35, 30 ஜனவரி 2013 (UTC)

செய்திகளில் பந்திகளுக்கிடையே இரண்டு வெற்று வரிகள் விடுவது நானாகக் கொண்டு வந்தது தான். ஒரு வரி விடுவதால் செய்தி மிக நெருக்கமாக இருப்பதாக உணருகிறேன். உங்கள் எண்ணம் எவ்வாறு? ஒரு வரி விடுவதில் எனக்கு ஆட்சேபனை இல்லை. மேலும் நான் தமிழ் எழுத NHM writer ஐயே பயன்படுத்துகிறேன் (பழகி விட்டது). இதனாலேயே தமிழில் எழுதும் போது “ “ இவ்வாறு வருகிறது. ஆங்கிலத்தில் எழுதும் போது " " (இதுவே சரி) என்றவாறு வருகிறது. மேலும், எனது பேச்சுப் பக்கத்தில் உள்ள உங்கள் கையொப்பத்தில் உங்கள் பயனர் பக்கத்துக்கான இணைப்புத் தெரியவில்லை. உங்கள் விருப்பத்தேர்வுகளில் இணைப்பைத் தேர்ந்தெடுக்கலாம்.--Kanags \பேச்சு 20:17, 31 ஜனவரி 2013 (UTC)
இங்கு உருவாக்கும் கட்டுரைக்கு ஆங்கில விக்கி செய்திகளுக்கு இணைப்புத் தரலாம். அங்கும் நீங்கள் தமிழ் செய்திக்கான இணைப்பைத் தரலாம்.--Kanags \பேச்சு 20:22, 3 பெப்ரவரி 2013 (UTC)
வங்காளதேசச் செய்தித் தலைப்பு மாற்றம் நன்று. நன்றி.--Kanags \பேச்சு 20:16, 5 பெப்ரவரி 2013 (UTC)

நன்றி --Muthuppandy pandian (பேச்சு) 05:47, 2 மே 2014 (UTC)

செய்தியின் திருத்தத்திற்க்கு நன்றி--Muthuppandy pandian (பேச்சு) 04:41, 7 ஜூன் 2014 (UTC)

கட்டுரைத் தலைப்பு[தொகு]

கட்டுரைத் தலைப்பில் எவ்வளவு எழுத்துக்கள் இருக்கலாம் என்பது தெரியவில்லை. பொதுவாக ஒருங்குறியில் இந்த எண்ணிக்கை மாறுபடலாம்.--Kanags \பேச்சு 12:08, 8 பெப்ரவரி 2013 (UTC)

மணல்தொட்டி[தொகு]

வணக்கம், நீங்கள் எழுத ஆரம்பிக்கும் கட்டுரைகளை மணல்தொட்டியில் ஆரம்பிக்காமல், நேரடியாக கட்டுரையாகவே ஆரம்பித்து உங்கள் தொகுப்பு அனைத்தும் முடிவடைந்தவுடன் வெளியிடலாம்.--Kanags \பேச்சு 11:27, 22 மார்ச் 2013 (UTC)

முதற்பக்க இற்றை[தொகு]

முதற்பக்கத்தை இற்றைப்படுத்தியமைக்கு நன்றி. சில மாற்றங்கள் செய்திருக்கிறேன். முதற்பக்கத்தில் விக்கி இணைப்புகள் தருவதில்லை. தலைப்பு சுருக்கமாக இருத்தல் நல்லது. மாற்றங்களைக் கவனியுங்கள். நன்றி.--Kanags \பேச்சு 01:48, 3 ஆகஸ்ட் 2013 (UTC)

நிருவாக அணுக்கம்[தொகு]

செல்வசிவகுருநாதன், விக்கிசெய்தியில் உங்களுக்கு நிருவாக அணுக்கம் தரப் பரிந்துரைக்கலாம் என இருக்கிறேன். இங்கு அதிகாரிகள் எவரும் இல்லாததால் இது குறித்து மெட்டாவிக்கியில் கேட்க வேண்டும். உங்களுக்கு விருப்பம் என்றால் இங்கு உங்கள் சம்மதத்தைத் தெரிவியுங்கள். நன்றி.--Kanags \பேச்சு 09:04, 4 டிசம்பர் 2013 (UTC)

விருப்பம்; பரிந்துரையுங்கள். நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 03:12, 5 டிசம்பர் 2013 (UTC)
நன்றி, விரைவில் பரிந்துரைக்கிறேன்.--Kanags \பேச்சு 11:23, 18 டிசம்பர் 2013 (UTC)

கவனிக்க[தொகு]

அடுத்த 3-4 நாட்களுக்கு எனது இணையப் பங்களிப்பு மிகவும் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே இருக்கும். விக்கிசெய்திகளை மட்டும் அவ்வப்போது கவனித்துக் கொள்ளுங்கள். நன்றி.--Kanags \பேச்சு 11:23, 18 டிசம்பர் 2013 (UTC)

என்னால் முடிந்த அளவு கவனிக்கிறேன் --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 12:40, 18 டிசம்பர் 2013 (UTC)

விக்கி செய்திகள் செயலற்று உள்ளதே!--Muthuppandy pandian (பேச்சு) 06:44, 17 நவம்பர் 2014 (UTC)

publish[தொகு]

செல்வசிவகுருநாதன், publish வார்ப்புருவை செய்திகளிலல்லாது வேறு இடங்களில் (மணல்தொட்டி போன்றவைகளில்) சேர்க்காதீர்கள். அவை டுவிட்டர், முகநூல் போன்றவற்றில் சேர்க்கப்பட்டுவிடும் சந்தர்ப்பம் உள்ளது.--Kanags \பேச்சு

சுட்டிக்காட்டியதற்கு நன்றி! இனி கவனமாக இருப்பேன். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 11:04, 24 ஏப்ரல் 2014 (UTC)

விக்கிசெய்தியில் நிருவாக அணுக்கம்[தொகு]

செல்வா, உங்களுக்கு நிருவாக அணுக்கம் மெட்டாவிக்கியினால் வழங்கப்பட்டுள்ளது. விக்கிசெய்திகளில் மேலும் சிறப்பாகப் பங்களிக்க அனைவரினதும் சார்பாக என் வாழ்த்துகள். உங்கள் அணுக்கத்தைப் பரிசோதிக்கலாம்.--Kanags \பேச்சு 03:02, 8 நவம்பர் 2015 (UTC)

உதவிக்கும், ஆதரவிற்கும் நன்றி; அணுக்கம் வேலை செய்கிறது. --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 11:09, 8 நவம்பர் 2015 (UTC)
"https://ta.wikinews.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Selvasivagurunathan_m&oldid=43977" இருந்து மீள்விக்கப்பட்டது