உள்ளடக்கத்துக்குச் செல்

பிரபல வீணை வித்துவான் கல்பகம் சுவாமிநாதன் காலமானார்

விக்கிசெய்தி இலிருந்து

வியாழன், ஏப்பிரல் 7, 2011

கடந்த எண்பது ஆண்டுகளாக வீணை வாசித்தும் கற்பித்தும் வந்த பேராசிரியை கல்பகம் சுவாமிநாதன் நேற்று தனது 89வது அகவையில் சென்னையில் காலமானார்.


தனது ஆறு வயதில் தாயார் அபயாம்பாளிடம் வீணை வாசிக்கக் கற்றுக் கொண்ட கல்பகம் சுவாமிநாதன் "தஞ்சாவூர் பாணியில்" வீணை வாசிப்பதில் கை தேர்ந்தவர். இவர் கல்லிடைக்குறிச்சி ஆனந்தகிருஷ்ண ஐயர், பி. சாம்பமூர்த்தி போன்ற கலைஞர்களிடம் பயிற்சி பெற்றார்.


ஐம்பதுகளில் டைகர் வரதாச்சாரியாரினால் கலாசேத்திராவில் அறிமுகப்படுத்தப்பட்டு அங்கு தனது ஆசிரியப் பணியை ஆரம்பித்தார். பின்னர் 1964 ஆம் ஆண்டில் தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் இணைந்து 1980 இல் பேராசிரியையாக இளைப்பாறினார்.


இவர் தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருது, இந்தியக் குடியரசுத் தலைவர் விருது, சங்கீத கலை ஆச்சாரியார் விருது ஆகிய விருதுகளைப் பெற்றிருக்கிறார்.


மூலம்

[தொகு]