பேச்சு:பிரபல வீணை வித்துவான் கல்பகம் சுவாமிநாதன் காலமானார்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
விக்கிசெய்தி இலிருந்து

ஓம். அண்டை வீட்டுக் காரர் எவர் என்பதைக் கூட அறிந்து கொள்வது அவசியமற்றதாக நினைந்து வாழும் தற்போதைய வாழும் நிலை மிகவும் வருந்தத் தக்க நடைமுறை. அடுக்குமாடிக் குடியிருப்பில் எதிர் வீட்டுக்காரர் எதிரில் வந்தாலும் ஒரு புன் சிரிப்பைக் கூட உதிர்க்க மனமின்றி புறம் பார்த்து கடந்து செல்லும் மனித இயல்பு எங்கும் காணப்படுகிறது. அவ்வாறெனில் அதே குடியிருப்பில் வேறு தளங்களின் குடியிருப்போரைப் பற்றி அறிந்து கொள்ளும் வாய்ப்பே இல்லை. இந்த நடைமுறை அடுக்கு மாடி வாழ்க்கையில் பொங்கல், தீபாவளி பண்டிகைகளின் போது வலுக் கட்டாயமாக அனைத்து குடும்பங்களும் குழந்தைகளும் பங்கேற்கும் வருடாந்திர விழாக்கள் மட்டுமே அறிமுக வாய்ப்புகளாகும். அங்கும் கூட மேட்டுக்குடி மக்களைப் பார்த்து நடிக்கும் மனோ நிலையும், தாய் மொழியில் பேசுவது கூட தாழ்வு என்று பேசும் கருதும் மக்களையும் பார்க்க முடிகிறது. பன் மொழி மக்கள் வாழும் நகரவாழ்க்கையில் ஆங்கிலமொன்றே ஆதார சுருதியாகச் செயல்படுவதும் உண்மை.

அவ்வாறிருக்க வேறு இடங்களில் வசித்து புகழ்பெற பெரியோர்களின் வரலாற்றுச்சுருக்கத்தையும் பெருமைகளையும் விக்கிப் பீடியாவில் வெளியிடும் அன்பர்க்கு நன்றிகள் பலப்பல அன்புடன் வெ.சுப்பிரமணியன் ஓம்

உங்கள் கருத்துக்கு நன்றி ஐயா.--Kanags \பேச்சு 07:19, 8 ஏப்ரல் 2011 (UTC)