உள்ளடக்கத்துக்குச் செல்

பிரித்தானிய மகாராணி முதற் தடவையாக அயர்லாந்துக்குப் பயணம்

Checked
விக்கிசெய்தி இலிருந்து

செவ்வாய், மே 17, 2011

ஐக்கிய இராச்சியத்தின் எலிசபெத் மகாராணி முதற்தடவையாக அயர்லாந்துக் குடியரசுக்கு இன்று பயணம் மேற்கொள்ளுகிறார். பிரித்தானிய ஆட்சியாளர் ஒருவர் அயர்லாந்துக் குடியரசுக்குப் பயண்ம் மேற்கொள்ளுவது இதுவே முதற்தடவையாகும்.


இரண்டாம் எலிசபெத் மகாராணி

மகாராணியாரின் நான்கு நாள் பயணத்துக்கு 4,000 பேர் காவல் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளார்கள். இவரது பயணத்தின் போது குடியரசுத் தீவிரவாதிகளின் வன்முறைகள் இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தலைநகர் டப்ளினை நோக்கிச் சென்று கொண்டிருந்த பேருந்து ஒன்றில் குண்டு என்று கண்டுபிடிக்கப்பட்டு செயலிழக்கப்பட்டது. லண்டனில் குண்டுப் புரளி ஒன்று குறித்து விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.


அயர்லாந்தின் குடியரசுத் தலைவர் மேரி மெக்கலீஸ் சம்பிரதாயபூர்வமாக டப்ளினில் உள்ள அவரது மளிகையில் மகாராணியை வரவேற்பார்.


1911 ஆம் ஆண்டில் பிரித்தானிய அரசர் ஐந்தாம் ஜோர்ஜ் மன்னர் கடைசியாக அயர்லாந்துக்குச் என்றிருந்தார். ஆனால் அப்போது அயர்லாந்து ஐக்கிய இராச்சியத்தின் ஆளுகைக்கு உட்பட்டிருந்தது. சரியாக நூறு ஆண்டுகளின் பின்னர் தற்போது மகாராணி செல்லவிருக்கிறார்.


மூலம்

[தொகு]