பீகாரில் மாவோயிஸ்டுகளின் தாக்குதலில் 11 பொதுமக்கள் உயிரிழப்பு

விக்கிசெய்தி இலிருந்து

வியாழன், பெப்பிரவரி 18, 2010


இந்தியாவின் கிழக்கில் பீகாரில் மாவோயிஸ்டுகள் எனச் சந்தேகிக்கப்படும் போராளிகளால் கிராமம் ஒன்று தாக்குதலுக்குள்ளாகியதில் 11 கிராமவாசிகள் படுகொலை செய்யப்பட்டனர்.


இந்தியாவில் பீகார் மாநிலத்தின் அமைவிடம்

இன்று வியாழன் அதிகாலையில் ஜாமுய் மாவட்டத்தில் புல்வாரியா கொராசி என்ற கிராமத்தை நூற்றுக்கும் அதிகமான போராளிகள் தாக்கியதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர். இக்கிராமம் தலைநகர் பட்னாவில் இருந்து 200 கிமீ தூரத்தில் அமைந்திருக்கிறது.


தீவிரவாதிகள் வீடு ஒன்றைக் குண்டு வைத்துக் தகர்த்ததாகவும், முப்பதுக்கும் அதிகமான குடிசைகளைத் தீக்கிரையாக்கியதாவும் தெரிவிக்கப்படுகிறது. தப்பியோடியோரை நோக்கித் துப்பாக்கிப் பிரயோகமும்ம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.


இரு வாரங்களுக்கு முன்னர் இக்கிராமத்தில் எட்டு போராளிகள் கிராமவாசிகளால் கொல்லப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இக்கொலைகளுக்குப் பழிவாங்கவே இன்றைய தாக்குதல் இடம்பெற்றதாகக் கூறப்படுகிறது.


சில கிராமவாசிகள் போராளிகளால் பிடித்துச் செல்லப்பட்டுள்ளனர் என்றும் கூறப்படுகிறது.


பல இந்திய மாநிலங்களில் கடந்த 20 ஆண்டு காலமாக கம்யூனிச ஆட்சிக்காக தீவிரவாதிகள் நடத்தும் சண்டைகளில் இதுவரையில் 6,000 இற்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர்.


அண்மைக்காலத்தில் பல மாநிலங்களில் இந்திய அரசு போராளிகளுக்கு எதிரரக பல தாக்குதல்களை ஆரம்பித்திருந்தது.


இந்தியாவின் 600 மாவட்டங்களில் 223 மாவட்டங்களில் போராளிகள் தீவிரமாயுள்ளனர்.

மூலம்