உள்ளடக்கத்துக்குச் செல்

புதுதில்லியில் நான்கு மாடிக் கட்டடம் இடிந்து வீழ்ந்ததில் பலர் உயிரிழப்பு

Checked
விக்கிசெய்தி இலிருந்து

செவ்வாய், நவம்பர் 16, 2010

இந்தியத் தலைநகர் புதுதில்லியின் கிழக்குப் பகுதியில் நேற்று திங்கட்கிழமை நான்கு மாடிக் கட்டடம் ஒன்று இடிந்து வீழ்ந்ததில் குறைந்தது 66 பேர் கொல்லப்பட்டனர்.


லலிதா பூங்கா என்ற குடியிருப்புப் பகுதியின் குறுகலான வீதிகள் வழியே நிவாரணப் பணியாளர்கள் நுழைவதில் பெரும் சிரமங்களை எதிர்கொண்டனர். பெரு மழி மற்றும் வெள்ளம் காரணமாக கட்டடத்தின் அத்திவாரம் வலுவிழந்திருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.


இடிபாடுகளிடையே சிக்குண்டவர்கள் பலரை உறவினர்கள் தமது கைகளால் இழுத்து எடுத்தனர். மேலும் 30 பேருக்கு மேல் இடிபாடுகளிடையே சிக்குண்டுள்ளார்கள் என காவல்துறையினர் தெரிவித்தனர். இந்த அனர்த்தம் நேற்று இரவு 2015 மணியளவில் நிகழ்ந்துள்ளது.


தீயணைப்புப் படையினரும் காவல்துறையினரும் அவ்விடத்துக்கு காலம் தாழ்த்தியே வந்தடைந்ததாக பொதுமக்கள் பிபிசி செய்தியாளருக்குத் தெரிவித்தனர்.


இதுதொடர்பாக கட்டட உரிமையாளர் மீது வழக்குப் பதிவுசெய்துள்ளனர். கட்டடம் இடிந்து விழுந்த தகவல் அறிந்தவுடன் அவர் குடும்பத்துடன் தலைமறைவாகிவிட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.


மூலம்

[தொகு]