பெங்களூர் மாநகராட்சி தேர்தலில் பாஜக வரலாற்றுச் சாதனை

விக்கிசெய்தி இலிருந்து

திங்கள், ஏப்பிரல் 5, 2010

இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் பெங்களூர் மாநகராட்சிக்கு கடந்த மார்ச் 28 அன்று தேர்தல் நடந்தது. இதில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வெற்றியை பாரதிய ஜனதா கட்சி (பாஜக) பெற்றுள்ளது. இதுவரை காங்கிரசுக் கட்சியே இம்மாநகரை ஆட்சி செய்துவந்துள்ளது. இந்த வெற்றியின் மூலம் முதல்முறையாக காங்கிரசிடமிருந்து கைப்பற்றியுள்ளது.


மொத்தமுள்ள 198 தொகுதிகளில் பாஜக 101 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையை பெற்றுள்ளது. காங்கிரசிற்கு 61 இடங்களும், தேவகவுடாவின் மதச்சார்பற்ற ஜனதா தளத்திற்கு 13 இடங்களும் கிடைத்துள்ளன. இன்னும் 18 இடங்களின் முடிவுகள் வெளிவர இருக்கிறது.


மேயர் தேர்தலுக்கு கர்நாடக நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டசபை உறுப்பினர்கள், மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் மொத்தம் 52 உறுப்பினர்களும் வாக்களிக்க முடியும். இதில் பாஜகவிற்கு 31 வாக்குகள் கிடைக்கும். இதனால் மேயர் பதவி பாஜகவிற்கு கிடைப்பது நிச்சயிக்கப்பட்டுள்ளது.

மூலம்[தொகு]