பெரியார் பல்கலைக்கழகத்தில் குடும்ப மனநலம் ஆற்றுப்படுத்துதல் தேசியப் பயிலரங்கம்

விக்கிசெய்தி இலிருந்து

வெள்ளி, ஆகத்து 15, 2014

பெரியார் பல்கலைக்கழகம்


சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் உளவியல் துறையின் சார்பில் திருமணத்திற்கு முன்-பின் மற்றும் குடும்பம் சார்ந்த மன நல ஆற்றுப்படுத்துதல் தேசியப் பயிலரங்கம் எதிர் வரும் ஆகஸ்ட் மாதம் 20 -ஆம் நாள் முதல் 22-ஆம் நாள் அறிவியல் புலக்கூடம் 2 இன் சொற்பொழிவு அறையில் நிகழ உள்ளது.

இப்பயிலரங்கத்தில் உளவியல் துறை சார்ந்த மாணவர்கள், ஆசிரியர்கள், ஆய்வாளர்கள், உடல் மற்றும் மனநலச் சேவையில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள், செவிலியர்கள், சமூகப் பணியாளர்கள் ஆகியோர் கலந்து கொள்ளலாம்.

பின்வரும் பொருண்களில் இப்பயிலரங்கத்தில் பயிற்சி அளிக்கப்படவுள்ளது, முதல் நாளில் (20.08.2014) திருமணம் செய்யும் முன் தரப்பட வேண்டிய ஆலோசனைகள், திருமண இணையர்களுக்கான சிறப்பு ஆலோசனைகள், குடும்ப உறவுகள் சார் ஆலோசனைகள் எனவும் இரண்டாம் நாளில் (21.08.2014) ஆலோசனைக் கோட்பாடுகளின் அடிப்படை பற்றி பயிற்சி, முர்ரே பிரவுன் அளிக்கும் குடும்ப அமைப்பு சார் பயிற்சி. விர்ஜினா சடிர் மற்றும் கால் விடேகர் அளிக்கும் அனுபவம் சார் குடும்ப ஆலோசனைகள். உளப்பகுப்பாய்வு சார்ந்த குடும்ப ஆலோசனை. மூன்றாம் நாளில் (22.08.2014) சல்வடோர் மினுசின் அவர்களின் குடும்ப அமைப்புசார் ஆலோசனைகள், குடும்பம் தொடர்பான அறிவுசார் நடத்தை ஆலோசனைகள் ஜே ஹேலே மற்றும் குளோ மேடன்ஸ் ஆகியோரது உத்தி சார் குடும்ப ஆலோசனை அளிக்கப்பெற உள்ளது.

இப்பயிலரங்கத்தில் மன நல ஆலோசகர்களுக்கு, தி ஃபவுண்டன் மனநலப் பயிற்சி மையத்தின் இயக்குநர் அருட்தந்தை ஜான் ஆண்டன் சிறப்புப் பயிற்சி அளிக்க உள்ளார்.

இப்பயிலரங்கிற்கான பதிவுக்கட்டணம் மற்றும் மேலதிக விவரங்களுக்கு ஜெ.பரமேஸ்வரி, உதவிப் பேராசிரியர் மற்றும் பயிலரங்க ஒருங்கிணைப்பாளர், உளவியல் துறை, பெரியார் பல்கலைக்கழகம் -636011 அவர்களைத்தொடர்பு கொள்ளலாம். அலைபேசி : 9655589871.

வெளி இணைப்புகள்[தொகு]

பெரியார் பல்கலைக்கழக அறிவிப்பு