பெரியார் பல்கலைக்கழகத்தில் 2ஆம் கட்ட தமிழ்க்கணினி மற்றும் தமிழ் விக்கிப்பீடியா பயிலரங்கம்
- 5 ஏப்ரல் 2016: பனாமா பேப்பர் விவகாரம் உலகின் அதிகாரமிக்கவர்களின் வரி ஏய்ப்பை காட்டியுள்ளது
- 23 திசம்பர் 2015: அண்டத்தின் அழகி பட்டம் தவறுதலாக பிலிப்பைன்சு அழகிக்கு பதில் கொலம்பியா அழகிக்கு தரப்பட்டது
- 9 ஏப்ரல் 2015: கோவையில் பெப்ரவரி 2010 இல் ஒன்பதாவது உலகத் தமிழ் மாநாடு
- 1 ஏப்ரல் 2015: பெரியார் பல்கலைக்கழகத்தில் நூறு மாணவர்கள் பங்கேற்ற விக்கியூடக மின் ஆவணவாக்கப் பயிலரங்கம்
- 25 மார்ச் 2015: சேலம் நடுவண் சிறையில் தமிழ்க்கணிமை, திறவூற்று மென்பொருள் பயிலரங்கம்
புதன், நவம்பர் 13, 2013
தமிழ்நாடு, சேலம் மாவட்டப் பொது மக்களுக்கும், கல்லூரி, பல்கலைக்கழக, மாணவர்களுக்கும் தமிழ்க்கணினி மற்றும் தமிழ் விக்கிப்பீடியா தொகுப்புப் பணிகளில் ஈடுபாட்டை ஏற்படுத்தவும் தமிழ் விக்கிப்பீடியாவின் திட்டங்களில் அனைவரும் பங்கேற்கும் வகையில் எளிய செய்முறை விளக்கம் அளிக்க வேண்டும் என்பதையும் நோக்கங்களாகக் கொண்டு, பெரியார் பல்கலைக்கழக வாழ்வியப்பணி வழிகாட்டி, பணியமர்த்தல் மையம், விக்கிப்பீடியா, தமிழக அரசின் வேலைவாய்ப்பு, பயிற்சித்துறையுடன் இணைந்து சேலம் சுழற்சங்கம் தமிழ்க்கணினி மற்றும் தமிழ் விக்கிப்பீடியா பயிலரங்கத்தின் இரண்டாம் கட்டப்பயிற்சியினை பெரியார் பல்கலைக்கழகத்திலுள்ள பெரியார் கலையரங்கிலும் பெரியார் பல்கலைக்கழக கணினி மையத்திலும் நவம்பர் 9 அன்று காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை நடத்தியது. இப்பயிலரங்கில் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
பெரியார் பல்கலைக்கழக வாழ்வியப்பணி வழிகாட்டி, பணியமர்த்தல் மைய ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் முனைவர். இரா. வெங்கடாசலபதி
வரவேற்புரையாற்றி, பயிலரங்கம் குறித்த அறிமுத்தை வழங்கினார். பெரியார் பல்கலைக்கழக இதழியல் மற்றமு மக்கள் தொடர்பாடல் துறையைச்சார்ந்த பேராசிரியர் மா. தமிழ்ப்பரிதி ‘‘கணித்தமிழ் மற்றும் தமிழ் விக்கிப்பீடியா’’ குறித்து இணைய வழி நேரிடை செயல் விளக்க படக்காட்சியுன் சிறப்புரை ஆற்றினார்.
இரண்டாம் அமர்வாக பெரியார் பல்கலைக்கழக கணினி மையத்தில் நடைபெற்ற செய்முறைப்பயிற்சியினை தகவலுழவன், திருமதி. பார்வதிஸ்ரீ, ஆகியோர் அளித்தனர்.
தமிழ் விக்கிப்பீடியா அறிமுகம், தமிழ் விக்கிப்பீடியா திட்டங்கள் , தமிழ் விக்கிப்பீடியா தொகுத்தல் பணி, தமிழ்க்கணினி அறிமுகம்,
தமிழ்க்கணினியின் தேவை, தமிழ் இயங்கு தளங்கள், தமிழ் மென்பொருட்கள், தமிழ் எழுத்துரு, தமிழ் ஒருங்குகுறி, தமிழ் ஒருங்குகுறியின் பயன்கள்,
தமிழ் வலைப்பூ உருவாக்கம், திறந்தநிலை இயங்குதளங்கள் மற்றும் மென்பொருட்கள், ஒலிக்கோப்பு, ஒளிப்படங்கள், காணொளிகளின் பயன்பாடுகள்
மற்றும் அவற்றை விக்கிப்பீடியா திட்டங்களில் இணைக்கும் முறைகள் ஆகியப் பொருண்மைகளில் நேரிடை செயல்முறைப்பயிற்சி அளிக்கப்பட்டது.
இந்த நிகழ்வை பெரியார் பல்கலைக்கழக பெரியார் பல்கலைக்கழக வாழ்வியப்பணி வழிகாட்டி, பணியமர்த்தல் மைய ஒருங்கிணைப்பாளர், அலுவலர்
பேராசிரியர் முனைவர். இரா. வெங்கடாசலபதி ஒருங்கிணைத்தார்.
இப்பயிலரங்கத்தின் முதலாவது அமர்வு சென்ற மாதம் அக்டோபர் 26 ஆம் நாளன்று பெரியார் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்றிருந்தது.
காட்சிகள்[தொகு]