பெரியார் பல்கலைக் கழகத்தில் உளவியல் கோட்பாடு ஆராய்ச்சி, பயிற்சிக்கான தேசிய கருத்தரங்கம்

விக்கிசெய்தி இலிருந்து

புதன், பெப்பிரவரி 18, 2015

சேலம் பெரியார் பல்கலைக் கழகத்தின் உளவியல் துறை சார்பில் உளவியல் கோட்பாடு ஆராய்ச்சி மற்றும் பயிற்சி தொடர்பான தேசிய அளவிலான கருத்தரங்கம் பிப்ரவரி 20, 21 ஆகிய இரு நாட்களில் பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற உள்ளது.

இக்கருத்தரங்கத்தில் உளவியல் துறை சார்ந்த மாணவர்கள், ஆசிரியர்கள், ஆய்வாளர்கள், உடல் மற்றும் மனநலச் சேவையில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் கல்வியாளர்கள் கலந்துகொள்ள உள்ளனர்.

இக்கருத்தரங்கில் மருத்துவ உளவியல், கல்வி உளவியல், தொழில் சார் உளவியல், சமூக உளவியல் வாழ்நடை உளவியல் மற்றும் பயன்பாட்டு உளவியல் போன்ற பற்பல உள்தலைப்புக்கள் விவாதிக்கப்பட உள்ளன. விவாதங்களில் தமிழகம், ஆந்திரம், தெலங்கானா, கர்நாடகம், புதுதில்லி மற்றும் இந்தியாவின் பற்பல பகுதிகளிலிருந்து உளவியல் வல்லுநர்கள் தமது ஆய்வுக்கட்டுரைகளை வழங்க உள்ளனர்.

மேலும் தொடர்புக்கு : 8098333999 க.ந. ஜெயக்குமார், உதவிப் பேராசிரியர், உளவியல் துறை, பெரியார் பல்கலைக்கழகம்.