பேபால் இ-பணம்பெறல் செயல்பாட்டை இந்தியாவில் நிறுத்துகிறது

விக்கிசெய்தி இலிருந்து

வியாழன், சூலை 29, 2010

ஈபே கட்டண நிறுவனம் பேபால் இந்தியாவில் இ-பணம்பெறல் செயல்பாட்டை நிறுத்துவதாக கூறியுள்ளது. இனி இந்திய பேபால் பயனாளர்களுக்கு வருகிற ஆகஸ்டு 1 முதல் காசோலை வழி கட்டண ஒன்றில் மட்டுமே பணம்பெற இயலும்.


பேபால் வலைப்பூவின் மூலமாக இந்த மாற்றம் கட்டுப்பாட்டு ஆணைப்படி ஏற்ப்படுத்த உள்ளதாக தொடர்பு கொண்டது.


தற்போது இந்திய பயனாளர்களுக்கு இருக்கும் சேவையான மின்வழி அல்லது இணைய வழி பணம்பெறல் சேவையை பயனர்கள் வருகிற சூலை 21 திகதி (தேதி) வரையில் மட்டுமே பெறமுடியும் என்று அந்நிறுவனம் தெரிவித்தது. மேலும் அடுத்த மாத தொடக்கத்தில் இருந்து மேற்கொள்ளப்படும் அனைத்து காசோலை பணம்பெறல் சேவை கட்டணமான 5$ ஐ பேபால் நிறுவனம் ஏற்றுக் கொள்ளும் என்று தெரிவித்தது.


கடந்த பிப்ரவரி மாதம் இதே போன்று இந்தியாவிற்குள் மேற்கொள்ளும் பணப்பரிமாற்றம் முற்றிலும் நிறுத்தம் செய்வதாக பேபால் நிறுவனம் அறிவித்தது. பின் ஒரு சில வாரங்களில் அதனை கைவிட்டதும் குறிப்பிடத்தக்கதாகும்.

மூலம்[தொகு]