உள்ளடக்கத்துக்குச் செல்

போலந்தின் அரசுத் தலைவராக புரொனிசுலாவ் கொமரோவ்ஸ்கி தெரிவானார்

விக்கிசெய்தி இலிருந்து

செவ்வாய், சூலை 6, 2010

போலந்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற அரசுத்தலைவர் தேர்தலில் புரொனிசுலாவ் கொமரோவ்ஸ்கி வெற்றி பெற்றுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.


புதிய அரசுத்தலைவர் யாரொசுலாவ் கொமரோவ்ஸ்கி

தேர்தல் முடிவுகளின் படி, பதில் அரசுத்தலைவர் 53.01% வாக்குகளையும், இவரை எதிர்த்துப் போட்டியிட்ட யாரொசுலாவ் காச்சின்ஸ்கி 46.99% வாக்குகளையும் பெற்றனர்.


கடந்த ஏப்ரம் மாதத்தில் விமான விபத்தில் கொல்லப்பட்ட முன்னாள் அதிபர் லேக் காச்சின்ஸ்கியின் சகோதரர் யாரொசுலாவ் காச்சின்ஸ்கி ஆவார். ரஷ்யாவில் நடந்த வைபவமொன்றில் கலந்து கொள்வதற்காக போலந்து ஜனாதிபதி விமானத்தில் சென்றவேளை அந்த விமானம் விபத்துக்குள்ளானது. இதையடுத்து ஜனாதிபதிப் பதவி வெற்றிடமானது.


கொமரோவ்ஸ்கியின் வெற்றி மூலம் நாட்டில் பிரதமரும், அரசுத் தலைவரும் ஒரே கட்சியைச் சேர்ந்தவர்களாக வந்திருக்கின்றனர். இதனால் நாட்டில் ஒரு அரசியல் ஸ்திரத் தன்மை ஏற்பட்டுள்ளதாக அவதானிகள் கருதுகின்றனர்.

தொடர்புள்ள செய்திகள்[தொகு]

மூலம்[தொகு]