மகாத்மா காந்தி வாழ்ந்த தென்னாப்பிரிக்க வீட்டை பிரெஞ்சு நிறுவனம் வாங்கியது

விக்கிசெய்தி இலிருந்து

வியாழன், அக்டோபர் 8, 2009, ஜொகான்னசுபேர்க்:


இந்தியாவின் விடுதலைப் போராட்ட வீரர் மகாத்மா காந்தி தென்னாப்பிரிக்காவில் வாழ்ந்த வீட்டை பிரெஞ்சு சுற்றுலாக் கம்பனி ஒன்று விலைக்கு வாங்கியது.


இங்கு அதிகப்படியான அமைதியை (காந்தி) விட்டுச் சென்றுள்ளார் என நான் நினைக்கிறேன். இது ஒரு சிறப்பான இடம்.

—ஓவியர் நான்சி பெல், முன்னாள் உரிமையாளர்

வொயேஜர்ஸ் டு மொண்டெ என்ற நிறுவனம் இவ்வீட்டை $377,029 அமெரிக்கா டாலர்களுக்கு வாங்கியுள்ளதாகத் தெரிகிறது. இவ்வீட்டை வாங்குவதற்கு இந்தியர்கள் உட்பட பலர் விருப்பம் தெரிவித்திருந்தனர்.


1907 ஆம் ஆண்டில் இருந்து காந்தி இவ்வீட்டில் மூன்று ஆண்டுகள் குடியிருந்தார். இவ்வீட்டை வாங்கிய பிரெஞ்சு நிறுவனம் இதற்கு "காந்தி அருங்காட்சியகம்" எனப் பெயரிடுவதற்குத் தீர்மானித்திருக்கிறது.


தொடர்புள்ள செய்திகள்

மூலம்