மடகஸ்காரில் கூட்டரசு அமைக்க தலைவர்கள் இணக்கம்

விக்கிசெய்தி இல் இருந்து
Jump to navigation Jump to search

ஞாயிறு, நவம்பர் 8, 2009

மடகஸ்காரில் கூட்டமைப்பு அரசு ஒன்றை அமைப்பதற்கு உயர்மட்ட அரசியல் தலைவர்கள் நால்வர் தமக்கிடையே உடன்பாடு ஒன்றை எட்டினர்.


அதிபர் ஆண்ட்ரி ராசொய்லினா
முன்னாள் அதிபர் மார்க் ரவலொமனானா

இவ்வுடன்பாட்டின் படி, இவ்வாண்டின் தொடக்கத்தில் மார்க் ரவலோமனானாவின் ஆட்சியை புரட்சி ஒன்றின் மூலம் கவிழ்த்த ஆண்ட்ரி ராசொய்லினா தொடர்ந்து ஜனாதிபதியாக இருப்பார். ராசொய்லினா, மற்றும் ரவலோமனானா உட்பட முன்னாள் ஜனாதிபதிகள் டீடியர் ரட்சிராக்கா, ஆல்பர்ட் சாஃபி ஆகியோர் உடன்படிக்கையில் கையெழுத்திட்டனர். இவர்களுக்கிடையேயான பேச்சுவார்த்தைகள் எத்தியோப்பியாவின் தலைநகர் அடிஸ் அபாபாவில் இடம்பெற்றன.


"ஜனாதிபதியை விட இரண்டு பதில்-ஜனாதிபதிகள் பதவியில் இருப்பார்கள்," என்று ராசொய்லினா செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.


இந்த நால்வரும் அமைச்சர் பதவிகளையும் வகிப்பார்கள் என மடகஸ்காருக்கான ஐக்கிய நாடுகளின் சிறப்புப் பிரதிநிதி டியேபில் டிராமே கருத்துத் தெரிவித்தார்.


இவ்வாண்டு மார்ச் 17 ஆம் நாள் இராணுவத்தினரின் உதவியுடன் ராசொய்லினா ஆட்சியைக் கைப்பற்றினார். முன்னாள் ஜனாதிபதி ரவலொமனானா நாடு கடந்த நிலையில் தென்னாப்பிரிக்காவில் வசித்து வருகிறார்.

மூலம்[தொகு]