உள்ளடக்கத்துக்குச் செல்

மணிப்பூரில் பயங்கர நிலநடுக்கம்: கட்டிட இடிபாடுகளில் சிக்கி 9 பேர் பலி

Checked
விக்கிசெய்தி இலிருந்து
மணிப்பூர் மாவட்டங்கள்

செவ்வாய், சனவரி 5, 2016

இந்தியாவின் வடகிழக்கு பிராந்தியமான மணிப்பூர் மாகாணத்தில், நேற்றைய அதிகாலை (4/1/2016) 04:35 மணியளவில் ஏற்ப்பட்ட இந்நிலநடுக்கம் ரிக்தர் அளவுகோலில் 6.8-ஆக பதிவாகியுள்ளது. இது மணிப்பூர் மாநிலத்தின் தமங்லாங் மாவட்டத்தில் பூமிக்கடியில் 17 கிலோமீட்டர் ஆழத்தில் மையங்கொண்டிருந்ததாக ஆய்வுமையம் அறிவித்துள்ளது.

இந்நிகழ்வில் 9 பலியாகினர் 1௦௦-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இந்த புவிநடுக்கத்தால், தூங்கிக் கொண்டிந்த மக்கள் அலறியடித்து வீடுகளை விட்டு வெட்டவெளிக்கு ஓடிவந்தனர். மேலும் இம்பால் நகரில் கட்டிடங்கள் இடிந்தது விழுந்ததுடன் பல கட்டிடங்களில் விரிசல்கள் ஏற்ப்பட்டது.

எனினும் நிலநடுக்கத்தின் மையப்பகுதியான தமங்லாங் நகரில் உயிரிழப்புகள் ஏதுமில்லை என்பது மூலதகவலாக உள்ளது. அசாம், மிசோரம், நாகாலாந்து, திரிபுரா, மேற்குவங்கம், ஒடிசா, சார்க்கண்ட் போன்ற மாநிலங்களிலும் பூகம்ப தாக்கம் உணரப்பட்டதாக ஊடகத்தகவல்கள் உள்ளது.



மூலம்

[தொகு]
  • [1] தி இந்து தமிழ்|சனவரி 05 2016.
  • [2] தினகரன்|சனவரி 05 2016.