உள்ளடக்கத்துக்குச் செல்

மதுரை வானூர்தி நிலையத்தில் அடிப்படை வசதிகள் வேண்டும்: பிரதமருக்கு வைகோ கடிதம்

விக்கிசெய்தி இலிருந்து

வெள்ளி, நவம்பர் 22, 2013

மதுரை வானூர்தி நிலையத்தை சுங்கவரி நிலையமாகத் தரம் உயர்த்தப்பட்டும், அதற்கான அடிப்படை வசதிகள் எதுவும் இன்றுவரையிலும் செய்து தரப்படவில்லை. அதற்கான அடிப்படை வசதிகள் மற்றும் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள உத்தரவிட வேண்டும் என மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் வைகோ இந்தியப் பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார்.


தென் மாவட்டங்களின் மையமாகத் திகழ்கின்ற மதுரை மாநகரம், கல்வியில் சிறந்ததாகவும், தொழில்துறை நகராகவும் வளர்ந்து வருகின்றது. அதனை ஒட்டி அமைந்து உள்ள தென்மாவட்டங்களும் வாகன உதிரிப் பாகங்கள், இரப்பர், வேதிப் பொருள் தொழிற்சாலைகள், கிரனைட்டு போன்ற தொழில்கள் மூலமாக வளர்ந்து வருகின்றன. இவை அனைத்தும், நெடுந்தொலைவில் உள்ள விமான நிலையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து ஏற்றுமதி ஆகின்றன. மேற்கண்டவைகள் அனைத்தும் மதுரை விமான நிலையத்தில் வழியாகவே ஏற்றுமதி செய்யப்பட்டால், போக்குவரத்துச் செலவு குறைவும்; கால விரயம் தவிர்க்கப்படும்; ஒட்டுமொத்தமாக உற்பத்திச் செலவும் குறையும். மே மாதம் மதுரை விமான நிலையம், சுங்கவரி விமான நிலையமாகத் தரம் உயர்த்தப்பட்டது. ஆயினும், அதற்கான அடிப்படை வசதிகள் எதுவும், இன்றுவரையிலும் செய்து தரப்படவில்லை. எனவே, மதுரை விமான நிலையம், முழுமையான அளவில் சுங்கவரி விமான நிலையமாக இயங்கிடத்தக்க வகையில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்த உரிய நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவு பிறப்பிக்கவேண்டும் என பிரதமருக்கு வைகோ வலியுறுத்தியுள்ளார்.


மூலம்

[தொகு]