மத்தியப் பிரதேசத்தில் கோயில் நெரிசலில் சிக்கி 60 பேர் வரையில் உயிரிழப்பு

விக்கிசெய்தி இலிருந்து

ஞாயிறு, அக்டோபர் 13, 2013

இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலத்தில் இந்துக் கோயில் ஒன்றுக்கு அருகே நெரிசல் ஏற்பட்டதில் 60 பேர் வரையில் கொல்லப்பட்டனர், மேலும் நூற்றுக்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.


மத்தியப் பிரதேசத்தின் டாட்டியா நகரில் இருந்து 60 கிமீ தூரத்தில் ரத்தன்கார் கோயிலில் இந்த நெரிசல் ஏற்பட்டது. கோயில் மூலத்தானத்திற்கு அருகில் உள்ள சிந்து ஆற்றைக் கடக்கும் பாலம் ஒன்றில் சென்று கொண்டிருந்த பக்தர்களுக்கு இடையே ஏற்பட்ட குழப்பத்தில் நெரிசல் ஏற்பட்டதாகவும், பலர் நெரிசலில் சிக்கி இறந்தந்தாகவும், மேலும் பலர் பாலத்தில் இருந்து ஆற்றுக்குள் குதித்ததில் இறந்ததாகவும் கூறப்படுகிறது.


நெரிசல் ஏற்பட்ட போது பாலத்தில் சுமார் ஆயிரம் பேர் வரையில் இருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. பாலம் உடையவிருப்பதாகப் பரவிய வதந்தியே நெரிசலுக்குக் காரணம் எனக் காவல்துறையினர் தெரிவித்தனர். கூட்டத்தைக் கட்டுப்படுத்த காவல்துறையினர் தடியடிப் பிரயோகம் செய்ததால் நெரிசல் ஏற்பட்டதாக வேறு சிலர் குறிப்பிட்டனர்.


500 மீட்டர் நீளமான ஒடுக்கமான பாலம் 2007 ஆம் ஆண்டில் இதே போன்ற நெரிசலினால் சேதமடைந்து அண்மையில் திருத்தப்பட்டது.


மூலம்[தொகு]