உள்ளடக்கத்துக்குச் செல்

மத்திய ஆப்பிரிக்கக் குடியரசு: கிறித்தவக் கும்பலால் முஸ்லிம்கள் கொல்லப்பட்டு எரிப்பு

Checked
விக்கிசெய்தி இலிருந்து
மத்திய ஆப்பிரிக்கக் குடியரசில் இருந்து ஏனைய செய்திகள்
மத்திய ஆப்பிரிக்கக் குடியரசின் அமைவிடம்

மத்திய ஆப்பிரிக்கக் குடியரசின் அமைவிடத்தைக் காட்டும் வரைபடம்

திங்கள், சனவரி 20, 2014

மத்திய ஆப்பிரிக்கக் குடியரசுத் தலைநகர் பாங்குயியில் முஸ்லிம்கள் இருவர் கிறித்தவக் கும்பல் ஒன்றினால் கொல்லப்பட்டு வீதியில் போட்டு எரிக்கப்பட்டனர். 25 பேர் படுகாயமடைந்தனர்.


தமது பகுதியில் உள்ள முஸ்லிம்களைத் தாம் கொல்லப்போவதாக அக்கும்பல் பிபிசி செய்தியாளரிடம் தெரிவித்துள்ளனர்.


முஸ்லிம் போராளிகள் நாட்டைத் தமது கட்டுப்பாட்டில் கொண்டு வந்ததை அடுத்து அங்கு எழுந்துள்ள இனமோதலை முடிவுக்குக் கொண்டு வருவதில் பிரெஞ்சு, மற்றும் ஆப்பிரிக்க ஒன்றியப் படையினர் பெரும் சிரமங்களை எதிர் நோக்க வேண்டியுள்ளனர்.


நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது புதிய இடைக்கால அரசை இன்று திங்கட்கிழமை தெரிவு செய்யவிருக்கின்றனர். முன்னாள் அரசுத்தலைவர் மிக்கேல் ஜொட்டோடியா கடந்த வாரம் தமது பதவியைத் துறந்து நாட்டை விட்டு வெளியேறினார். இவரது தலைமையிலான செலெக்கா என்ற முஸ்லிம் கிளர்ச்சியாளர்கள் கடந்த ஆண்டு மார்ச்சு மாதத்தில் ஆட்சியைக் கைப்பற்றியதை அடுத்து ஜொட்டோடியா அந்நாட்டின் முதலாவது சிறுபான்மையின முஸ்லிம் அரசுத்தலைவராக அறிவிக்கப்பட்டார்.


இதையடுத்து அங்கு பெரும்பான்மையினக் கிறித்தவர்களுக்கும், சிறுபான்மையின முஸ்லிம்களுக்கும் இடையே இனமோதல்கள் வெடித்தன. வன்முறையைக் கட்டுப்படுத்த முடியாமல் ஜொட்டோடியா நாட்டை விட்டு வெளியேறினார்.


கடந்த வெள்ளிக்கிழமை தமது இருப்பிடங்களை விட்டு அயல்நாடான கமெரூனுக்கு வெளியேற எத்தனித்த 22 முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டனர்.


மூலம்

[தொகு]