மத்திய ஆப்பிரிக்கக் குடியரசு வன்முறைகளை அடக்க பிரெஞ்சுப் படைகள்
- 17 பெப்பிரவரி 2025: மத்திய ஆப்பிரிக்கக் குடியரசு: இராணுவக் குழுக்களுக்கு அரசுத்தலைவர் எச்சரிக்கை
- 17 பெப்பிரவரி 2025: மத்திய ஆப்பிரிக்கக் குடியரசு: கிறித்தவக் கும்பலால் முஸ்லிம்கள் கொல்லப்பட்டு எரிப்பு
- 17 பெப்பிரவரி 2025: மத்திய ஆப்பிரிக்கக் குடியரசு அரசுத்தலைவர் பதவி விலகி, நாட்டை விட்டு வெளியேறினார்
- 17 பெப்பிரவரி 2025: மத்திய ஆப்பிரிக்கக் குடியரசு வன்முறைகளை அடக்க பிரெஞ்சுப் படைகள்
- 17 பெப்பிரவரி 2025: மத்திய ஆப்பிரிக்கக் குடியரசு: போராளிகளின் தலைவர் சரணடைவது குறித்துப் பேச்சுவார்த்தை
ஞாயிறு, திசம்பர் 8, 2013
இன வன்முறைகள் தலைதூக்கியுள்ள மத்திய ஆப்பிரிகக்க் குடியரசின் பொசாங்கோ நகருக்கு பிரெஞ்சுப் படையினர் அனுப்பப்பட்டுள்ளனர். நாட்டின் உள்நாட்டுப் போரை முடிவுக்குக் கொண்டு வரும் பொருட்டு அங்குள்ள ஆப்பிரிக்க ஒன்றியப் படையினருக்கு உதவியாக பிரான்சு தனது 1,600 படைவீரர்களை அங்கு அனுப்பியுள்ளது.
நாட்டில் வன்முறைகளை முடிவுக்குக் கொண்டு வருவதும், நிவாரண உதவிகள் தடையின்றிக் கிடைக்க வழிவகை செய்வதுமே தமது முக்கிய நோக்கம் என பிரெஞ்சு பாதுகாப்பு அமைச்சர் செய்தியாளர்களிடம் கூறினார்.
கடந்த மார்ச்சு மாதத்தில் அரசுத்தலைவர் பதவியில் இருந்து அகற்றப்பட பின்னர் மத்திய ஆப்பிரிகக்க் குடியரசில் பெரும் வன்முறைகள் வெடித்துள்ளன. பிரான்சுவா பொசீசே செலெக்கா என்ற போராளிக் கூட்டமைப்பினரால் பதவியில் இருந்து அகற்ரப்பட்டார். அவ்வமைப்பின் தலைவர் மிக்கெல் ஜொட்டோடியா அரசுத்தலைவரானார். செலெக்காவின் ஆயுதம் தாங்கிய போராளிகள் நாட்டைத் தமது கட்டுப்பாட்டினுள் வைத்துள்ளனர்.
கடந்த மூன்று நாட்களில் 30 பேர் வரையில் அங்கு வன்முறைகளினால் கொல்லப்பட்டுள்ளனர்.
மூலம்
[தொகு]- CAR violence: French troops reach town of Bossangoa, பிபிசி, டிசம்பர் 8, 2013
- [1], ராய்ட்டர்சு, டிசம்பர் 8, 2013