உள்ளடக்கத்துக்குச் செல்

மலேசியாவில் எதிர்க்கட்சி ஆர்வலர் படுகொலை செய்யப்பட்டிருக்கலாம்

விக்கிசெய்தி இலிருந்து

ஞாயிறு, நவம்பர் 22, 2009


மலேசியாவில் அரசாங்கத்தின் தடுப்புக்காவலில் இருந்தபோது உயிரிழந்திருந்த எதிர்க்கட்சி ஆர்வலர், கொலை செய்யப்பட்டிருக்க வாய்ப்புள்ளது என்று மருத்துவர் ஒருவர் கூறியதை அடுத்து, அந்த எதிர்க்கட்சி ஆர்வலரின் உடல் இரண்டாவது தடவையாக பிரேதப் பரிசோதனை செய்யப்படுவதற்காக கல்லறையிலிருந்து தோண்டியெடுக்கப்பட்டுள்ளது.


டியோ பெங்ஹொக் என்ற அந்த ஆர்வலர், மலேசிய லஞ்ச ஒழிப்பு துறை அலுவலக சாளரங்களின் கீழே மேற்கூரை ஒன்றில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டிருந்தார்.


எதிர்க்கட்சி கட்சித் தலைவர் பொது நிதியைத் தவறாகப் பயன்படுத்தியிருந்தார் என்ற குற்றச்சாட்டு தொடர்பில் இந்தக் கட்டிடத்தில் வைத்து டியோ விசாரிக்கப்பட்டிருந்தார்.


டியோ கடந்த ஜூலையில் ஒன்பது மாடிக் கட்டிடத்தில் இருந்து கீழே விழுந்து தற்கொலை செய்துகொண்டார் என ஆரம்பத்தில் கூறப்பட்டிருந்தது. ஆனால் அவர் தாக்கப்பட்டும், சித்திரவதை செய்யப்பட்டும், குரல்வளை நெரிக்கப்பட்டும் கொல்லப்பட்டிருக்கலாமென்று அவரது உடலில் காணப்படும் தழும்புகள் காட்டுவதாக பிரபலமான தாய்லாந்து நோய்க்கூறு நிபுணர் டாக்டர் பொர்ன்திப் ராஜானாசுனாந்து கூறியுள்ளார்.


சிலாங்கூர் செமினியில் உள்ள நிர்வாணா நினைவுப் பூங்காவில் சோகமான சடங்குகளுடன் அரசியல் உதவியாளர் தியோ பெங் ஹாக்கின் சடலம் மீண்டும் தோண்டி எடுக்கப்பட்டது.


மூலம்

[தொகு]