உள்ளடக்கத்துக்குச் செல்

மலேசியா, விசா விண்ணப்பத்தை எளிமையாக்கியுள்ளது

Checked
விக்கிசெய்தி இலிருந்து

செவ்வாய், ஆகத்து 3, 2010


சுற்றுலாப் பயணிகளை, குறிப்பாக இந்தியா மற்றும் சீனா பயணிகளைக் கவரும் நோக்கில் மலேசிய அரசு சுற்றுலா விசா விண்ணப்பத்தை எளிமையாக்கி உள்ளது.


அந்நாட்டு சுற்றுலாத் துறை அமைச்சர் தடுக் செரி இங் யென் யென் ”மலேசியாவிற்கு வர விரும்பும் சுற்றுலா பயணிகள் அயல்நாட்டுப் பேராளர் அலுவலகத்தை நாடுவதைவிட இப்பணிக்கு அமர்த்தப்பட்ட சிலரிடம் உள்ளூர் நியமாளரிடம் இருந்து எளிதாக விசாவிற்கு விண்ணப்பம் செய்யலாம்,” எனக் குறிப்பிட்டார்.


மலேசிய அயல்நாட்டுப் பேராளர் அலுவலகம் குறைவாக உள்ள இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகளில் விசா வழங்கு அமைப்பில் மேலும் எளிதாகச் செய்ய முயற்சித்து வருகிறது.


நியமித்த தரகர்களிடம் விசாவிற்காக ஒரு சிறிய தொகை மட்டும் தரவேண்டும் என்றும், மேலும் முன்பு உள்ளது போன்று தொகை இல்லாமலும் விண்ணப்பிக்கலாம் என்றும் மலேசிய அரசு கூறியுள்ளது.


இந்தியர்களும், சீனர்களும் தான் மலேசியாவிற்கு வரும் பெரும் சுற்றுலாக் கூட்டத்திற்கு காரணம் என்று மலேசியா அரசு தெரிவித்தது.

மூலம்

[தொகு]