முஜிபுர் ரகுமான் கொலை வழக்கு: எதிரிகளின் மேன்முறையீடு நிராகரிப்பு

விக்கிசெய்தி இல் இருந்து
Jump to navigation Jump to search

வெள்ளி, நவம்பர் 20, 2009

வங்காளதேசத்தில் இருந்து ஏனைய செய்திகள்
வங்காளதேசத்தின் அமைவிடம்

வங்காளதேசத்தின் அமைவிடத்தைக் காட்டும் வரைபடம்


வங்காளதேசத்தின் முன்னாள் பிரதமரும் வங்கதேசத்தின் தந்தையுமான முஜிபுர் ரகுமானின் படுகொலையுடன் தொடர்புடைய 15 பேரில் ஐவர் மீதான மேன்முறையீட்டுத் தீர்ப்பு நேற்று நிராகரிக்கப்பட்டது. இந்த ஐவருக்கும் மரண தண்டனை விதிக்கப்படலாமென எதிர்பார்க்கப்படுகிறது.


தற்போதைய பிரதமர் ஷேக் ஹசீனாவின் தந்தையான முஜிபுர் ரகுமான் 1975 ஆகஸ்ட் 15 இல் கொலை செய்யப்பட்டார்.


மேல்முறையீடு நிராகரிக்கப்பட்ட செய்தியை அறிந்து வங்கதேசப் பிரதமர் ஷேக் ஹசீனா உணர்ச்சி பொங்கக் கண்கலங்கினார் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.


இக் கொலையுடன் தொடர்பான முதல் வழக்கு 1996 ஆம் ஆண்டு ஷேக் ஹசீனா ஆட்சிக்கு வந்த போது எடுத்துக் கொள்ளப்பட்டது. 2001 ம் ஆண்டு 12 பேருக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டதுடன் மூன்று பேர் விடுதலை செய்யப்பட்டனர்.


ஆறு பேர் வெளிநாடுகளில் தலைமறைவாகினர். ஏனைய ஆறு பேரில் ஒருவர் இயற்கை மரணமடைந்தார். மீதி ஐந்து பேரும் 2001 இல் தங்களுக்கெதிராக வழங்கப்பட்ட மரண தண்டனையை எதிர்த்து மேன் முறையீடு செய்தனர்.


வங்காளதேசத்தில் ஆட்சிமாற்ற மேற்பட்டதால் இந்த வழக்கு கிடப்பில் கிடந்தது. மீண்டும் ஷேக் ஹசீனா ஆட்சியைக் கைப்பற்றியதால் இந்த வழக்கு ஒக்டோபர் 5 இல் விசாரிக்கப்பட்டு இறுதி முடிவு நேற்று வெளிவந்த்தது. குடியரசுத் தலைவர் கருணை அடிப்படையில் மரண தண்டனையை ரத்து செய்யாத பட்சத்தில், ஒரு மாதத்துக்குள்ளாகவேகூட இவர்கள் தூக்கிலிடப்படலாம்.


முஜிபுர் ரகுமான் அவாமி லீக் கட்சியின் தலைவராகவும் வங்காள தேசத்தின் முதலாவது அதிபராகவும் பின்னர் இறக்கும் வரையில் அந்நாட்டின் முதலாவது பிரதமராகவும் இருந்தவர். இவரும் இவரது குடும்பத்தினரும் இராணுவப் புரட்சி ஒன்றை அடுத்து 1975 இல் படுகொலை செய்யப்பட்டனர். இவர் குடும்பத்தில் உயிர்தப்பிய முஜிபுரின் மூத்த மகள் சேக் ஹசீனா 1996 - 2001 காலப்பகுதியில் வங்கதேசத்தின் பிரதமராக இருந்தார்.


தனது பெற்றோர், உடன்பிறந்தோர் மற்றும் வேறு இருபது பேரின் படுகொலைக்குக் காரணமானவர்கள் தண்டனைக்குள்ளாவதை உறுதிசெய்ய வேண்டும் என்று அந்த நாள் முதலே ஷேக் ஹசீனா தீர்மானமாக இருந்துவந்தார்.


படுகொலைக்குக் காரணமான அப்போது இளம் இராணுவ அதிகாரிகளாக இருந்த நபர்களுக்கு வங்கதேசத்தின் முந்தைய அரசாங்கங்கள் அரண்களாக இருந்து அவர்கள் மீதான நடவடிக்கைகளுக்கு தடையாய் இருந்தன.

மூலம்[தொகு]