உள்ளடக்கத்துக்குச் செல்

முதல் தொகுதி அகதிகள் குழுவை ஆத்திரேலியா மானுஸ் தீவுக்கு அனுப்பியது

விக்கிசெய்தி இலிருந்து

புதன், நவம்பர் 21, 2012

ஆத்திரேலியாவுக்குள் சட்டவிரோதமாகக் கடல் மார்க்கமாக வந்திறங்கிய அகதிகள் குழுவொன்று பப்புவா நியூ கினியின் மானுஸ் தீவில் அமைக்கப்பட்டுள்ள தடுப்பு முகாமுக்கு அனுப்பபட்டுள்ளனர் என ஆத்திரேலிய குடிவரவுத்துறை அமைச்சு அறிவித்துள்ளது.


மானுஸ் தீவு

இலங்கை, மற்றும் ஈரான் நாட்டைச் சேர்ந்த 19 பேர் இன்று அதிகால சிறப்பு விமானம் மூலம் பப்புவா நியூ கினியில் வந்திறங்கினர். மானுஸ் தீவில் புதிதாக அமைகக்ப்பட்டுள்ள தடுப்பு முகாமுக்கு வரும் முதல் தொகுதியினர் இவர்களாவர்.


பசிபிக் தீவான நவூரு தீவிலும் இவ்வாறான முகாம் அமைக்கப்பட்டு அங்கு தற்போது முன்னூறுக்கும் அதிகமானோர் தங்கியுள்ளனர். அங்கு தங்கியுள்ளோரில் பெரும்பாலானோர் இலங்கையர் ஆவர்.


ஆத்திரேலியாவுக்குள் சட்டவிரோதமாக படகுகளில் வரும் அகதிகளை பப்புவா நியூ கினியில் உள்ள தடுப்பு முகாம் ஒன்றில் தங்கி வைத்து அவர்களின் விண்ணப்பங்களைப் பரிசீலிக்க ஆத்திரேலிய அரசு சமர்ப்பித்த சட்டமூலத்தை கடந்த மாதம் [[பப்புவா நியூ கினியில் அகதிகளுக்கான முகாம் அமைக்க ஆத்திரேலிய நாடாளுமன்றம் ஒப்புதல்|அந்நாட்டு நாடாளுமன்றம் அனுமதி அளித்திருந்தது.


கடந்த செவ்வாய்க்கிழமை அன்று பன்னாட்டு மன்னிப்பகத்தைச் சேர்ந்த பிரதிநிதிகள் குழுவொன்று நவூரு தீவுக்குச் சென்று அங்குள்ள முகாம்களின் நிலைமைகளை அவதானித்தது. இக்குழுவின் அறிக்கை இவ்வார இறுதியில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


மூலம்[தொகு]